Yuvan Shankar Raja: காந்தக் குரலில் ரசிகர்களை மயக்கும் யுவன் பிறந்தநாள்.. இசை மாயாஜாலம்!

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இளையராஜாவின் வாரிசு என்ற பின்புலத்தில் சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.

பல சூப்பர்ஹிட் படங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளை கடந்து இவரது இசைப்பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது.

Music director Yuvan shankar Raja celebrates his birthday today

இன்றைய தினம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: இசைஞானி இளையராஜாவின் இளையமகன் என்ற அடையாளத்துடன்தான் யுவன் சங்கர் ராஜா சினிமாவில் காலடி பதித்தார். ஆனாலும் தன்னுடைய தனிப்பட்ட இசைத் திறமையால் தற்போது யுவனின் அப்பா இளையராஜா என்ற அந்தஸ்தை இளையராஜாவின் மகுடத்தில் சூட்டியுள்ளார். தன்னுடைய சிறப்பான மனதை மயக்கும் பல பாடல்கள் மற்றும் பிஜிஎம் மூலம் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். இவரது இசை சாம்ராஜ்யம் தொடர்ந்து வருகிறது.

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து இசையமைத்து வருகிறார் யுவன். அடுத்ததாக விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் தளபதி 68 படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இந்த காம்பினேஷன் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் யுவன். அவரை திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களால் திணறடித்து வருகின்றனர். அவரது இசையில் நெஞ்சை உலுக்கிய, உற்சாகத்தை அளித்த பாடல்கள் சிலவற்றை தற்போது பார்க்கலாம்.

வெங்கட்பிரபுவுடன் யுவன் கூட்டணி எப்போதுமே சிறப்பாக அமையும். அந்த வகையில் பிரியாணி படத்தில் எதிர்த்து நில் என்ற பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக அமைந்தது. இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ள யுவன், ஜிவி பிரகாஷ், டி இமான், விஜய் ஆண்டனி, தமன் ஆகியோருடன் இணைந்து பாடியிருந்தார். மனது சோர்வுறும் போதெல்லாம் இந்தப் பாடல் கண்டிப்பாக உற்சாக டானிக்காக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தப் பாடலை தொடர்ந்து கார்த்தியின் அறிமுகப்படமான பருத்தி வீரன் படத்திலும் யுவன் இசையமைத்திருந்தார். அமீர் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் பிரியா மணி -கார்த்தி ஜோடி சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டான நிலையில் ஐய்யய்யோ பாடல் மிகவும் அதிகமான ரசிர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது. யுவன் கேரியரில் இந்தப் படம் முக்கியமாக அமைந்தது.

இதேபோல கார்த்தியின் பையா படத்திலும் சிறப்பான இசையில் அனைத்து பாடல்களையும் ஹிட்டடித்திருந்தார் யுவன். அவரது வாய்சில் வெளியான என் காதல் சொல்ல நேரமில்லை பாடல் காதலின் ஏக்கத்தை அழகாக வெளிப்படுத்தியது. இந்தப் படத்தில் கார்த்தி -தமன்னா கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தப் பாடல் யுவன் இசையில் ரசிகர்களின் பேவரைட்டாக அமைந்தது. தன்னுடைய குரலால் இந்தப் பாடலுக்கு இனிமை சேர்த்திருந்தார் யுவன்.

முன்னதாக சிம்பு, ஜோதிகா கூட்டணியில் வெளியான மன்மதன் படத்திலும் யுவன்தான் இசை. இந்தப் படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்த நிலையில், சிம்பு வாய்சில் வெளியான காதல் வளர்த்தேன் பாடல் மிகப்பெரிய ஹிட். தற்போதும் சிம்பு ரசிகர்களின் பேவரைட் பாடலாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. இதேபோல சிம்பு, நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்த வல்லவன் படத்தின் லூசுப் பெண்ணே பாடலும் சிறப்பான பாடலாக மிகவும் ஸ்டைலாக அமைந்தது.

ரொமாண்டிக் பாடல்கள் மட்டுமில்லாமல் காதலின் வலியை சொல்வதிலும் யுவன் சங்கர் ராஜா எப்போதுமே பெஸ்ட் தான். சிவா மனசுல சக்தி படத்தில் வரும் ஒரு கல் ஒரு கண்ணாடி பாடலும் யுவன் இசையில் மேஜிக் செய்தது. இதேபோல செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி படத்தில் கண்பேசும் வார்த்தைகள் என்ற பாடலும் யுவன் இசையமைப்பில் மிகவும் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்திலும் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X