Yuvan: கோட் ’விசில் போடு’ தான் காரணமா?.. இன்ஸ்டாகிராமில் இருந்து விலகியது ஏன்.. யுவன் விளக்கம்!

சென்னை: நடிகர் விஜய்யுடன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. நீண்ட காலங்களுக்கு பிறகு இணைந்துள்ள இந்தக் கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழ் புத்தாண்டையொட்டி ரிலீசானது. விஜய் வாய்சில் வெளியான இந்தப் பாடல் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தன்னுடைய இசை மூலம் ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்துவரும் யுவனிற்கு என்னதான் ஆச்சு என்று நேரடியாகவே ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதனிடையே யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் ஆகியுள்ளது. இதையடுத்து ரசிகர்களின் GOAT பாடல் குறித்த விமர்சனங்களால் யுவன் இந்த முடிவை எடுத்தாரா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Music director Yuvan shankar Raja clarified about his Instagram issue

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் The greatest of all time படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மாஸ்கோவில் நடந்துள்ளது. நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த சூட்டிங்கிற்காக மாஸ்கோ புறப்பட்டு சென்றனர். படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. விஜய் வாய்சில் இந்தப் பாடல் உருவாகியிருந்தது.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இந்தக் கூட்டணி மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. சுட்டி டிவி ரைம்ஸ் போல இருப்பதாகவும் யுவனுக்கு சம்பள பாக்கியா என்றும் ஒரு ரசிகை சமூக வலைதளம்மூலம் பங்கம் செய்திருந்தார். இந்தப் பாடலில் நடிகர் விஜய்யுடன், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்டவர்கள் ஆட்டம் போட்டிருந்தனர்.

யுவன் விளக்கம்: இதனிடையே யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் டெலிட் ஆகியுள்ளது. விஜய்யின் விசில் போடு பாடலுக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள்தான் இதற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இன்ஸ்டாகிராம் பக்கம் டெலிட் ஆனதாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தன்மீது அக்கறை கொண்டு மெசேஜ் போட்ட அனைத்து நபர்களுக்கும் நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய தொழில்நுட்ப டீம் தன்னுடைய அக்கவுண்ட்டை மீண்டும் எடுக்க முயற்சித்து வருவதாகவும் விரைவில் இணைவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்றென்றும் அன்புடன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Music director Yuvan shankar Raja clarified about his Instagram issue

விஜய் -யுவன் காம்பினேஷன்: இளையராஜா, ஏஆர் ரஹ்மான் என முன்னணி இசையமைப்பாளர்கள் ஃபீல்டில் இருந்தபோதே இசையமைப்பாளராக தன்னுடைய இளம் வயதிலேயே என்ட்ரி ஆனவர் யுவன் சங்கர் ராஜா. பல முன்னணி ஹீரோக்களுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்த யுவன், நீண்ட காலங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் GOAT படத்தின் மூலம் இணைந்திருந்தார். இதனால் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. படத்தில் 4 பாடல்களை அவர் உருவாக்கியுள்ளதாக கூறப்படும் சூழலில், முதல் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த பாடல்கள் கவனம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X