Actor Simbu: சிம்புவுடன் STR48 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்.. அட இவரா!
சென்னை: கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார் நடிகர் சிம்பு. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக மிகவும் வெயிட்டான கேரக்டரில் அவர் நடித்து வருவதாகவும் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இந்தப் படத்தை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி என இரு நாயகிகள் கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கமல்ஹாசன், திரிஷா, சிம்பு, அபிராமி, நாசர் உள்ளிட்ட நடிகர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படத்தில் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக மிகவும் வெயிட்டான கேரக்டரில் நடிகர் சிம்பு நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அவர் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் நீண்ட தலை முடியை குடுமி போட்டபடி நடிகர் சிம்பு காணப்படுகிறார்.
STR48 படம்: முன்னதாக எஸ்டிஆர் 48 படத்திற்காக சிம்பு மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. படத்தின் தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஒரு ஆண்டை கடந்து இந்தப் படத்திற்காக பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார் சிம்பு. நீண்ட தலைமுடியை வளர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது எஸ்டிஆர் 48 படத்திற்காக காத்திருக்காமல் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளார். விரைவில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக எஸ்டிஆர் 48 படத்தில் சிம்பு இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பான் இந்தியா படம்: படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இந்தியன் 2 ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் படத்தில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இதை உறுதிப்படுத்தும்வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில் படத்தில் ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி என இரு பாலிவுட் நடிகைகள் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எஸ்டிஆர் 48 பட இசையமைப்பாளர்: இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் இசையமைக்க யுவன் சங்கர் ராஜாவிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்தும் விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். கடந்த 2 ஆண்டுகளாக சிம்புவின் படங்கள் வெளியாகாத சூழலில் அடுத்தடுத்த படங்களில் அவர் நடிக்கவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











