Yuvan: நாளை வெளியாகும் யுவன் சங்கர் ராஜாவின் அடுத்தப்பாடல் குறித்த அறிவிப்பு.. கோட் 3வது சிங்கிள்?

சென்னை: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களின் படங்களில் இசையமைத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா என்றால் பிஜிஎம் மற்றும் மெலடி பாடல்களுக்கு சொந்தக்காரர் என ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் இணைந்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்தடுத்த இரண்டு சிங்கிள்கள் வெளியாகியுள்ளன. வரும் செப்டம்பர் 5ம் தேதி படம் ரிலீசாகவுள்ள நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Yuvan shankar raja The greatest of all time movie Vijay

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து சிறப்பான பாடல்களை கொடுத்து வருகிறார். இவரது ஸ்பெஷல் என்றால் அது படத்தில் இடம்பெறும் பிஜிஎம் மற்றும் மெலடி பாடல்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் பிஜிஎம் மூலம் அந்த படத்தை பிரம்மாண்டமாக மாற்றுபவர் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு இசையமைத்து வருகிறார் யுவன். இந்த படத்தில் விஜய்யுடன் வெங்கட் பிரபு இணைந்தவுடன் அவர் உடனடியாக இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் இதையடுத்து விஜய் -யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி உருவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

யுவன் இசையில் கோட் படம்: பல படங்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விசில் போடு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான சின்ன சின்ன கண்கள் என்ற மெலடி பாடலும் எதிர்பார்த்த அளவிருக்கு ரசிகர்களை கவரவில்லை. விஜய் பிறந்தநாளில் வெளியான இந்த பாடல் அதிரிபுதிரியாக அமைந்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். ஆனால் பாடல் மெலடியாக விஜய் மற்றும் பவதாரணி வாய்ஸில் வெளியானது.

கோட் படத்தின் 2வது சிங்கிள்: மறைந்த பவதாரணியின் வாய்ஸை ஏஐ மூலம் இந்த பாடலில் பயன்படுத்தியிருந்தார் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அடுத்த சிங்கிள் என்றும் நாளை அறிவிப்பு என்றும் தெரிவித்துள்ளார். இது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் அடுத்த சிங்கிள் குறித்த அறிவிப்பா அல்லது அவரது மற்ற படங்களின் சிங்கிள் குறித்த அறிவிப்பா என்பது நாளைய தினம் தெரியவரும். இதனிடையே இயக்குநர் விஷ்ணுவர்தனின் அடுத்தப்படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.


நேசிப்பாயா படம்: காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு நேசிப்பாயா என்று கவிதைத்தனமாக டைட்டில் வைத்துள்ளனர். இந்தப் படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். இதனால் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை நாளைய தினம் யுவன் வெளியிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படி நெக்ஸ்ட் சிங்கிள் என்று மட்டும் குறிப்பிட்டு ரசிகர்களை அதிகமாக யோசிக்க வைத்துள்ளார் யுவன். எதுவாக இருந்தாலும் நாளை வரை காத்திருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X