Vijay: கோட் படத்தில் யுவன் சங்கர் ராஜா செய்த சம்பவம்.. மாஸ் ஹிட்டிற்கு காத்திருக்கும் 2வது பாட்டு!
சென்னை: விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ள படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், திரிஷா, மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆகியோரும் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் சில காட்சிகளில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வளவு நட்சத்திர பட்டாளங்களை வைத்து வேலை வாங்கி உள்ளார் வெங்கட் பிரபு. அவர்கள் அனைவருக்கும் படத்தில் சமமான ஸ்பேஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் வரும் 22ம் தேதி விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் 2வது பாடல் அல்லது டீசர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய். பிரசாந்த். பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் இன்னும் ஒரு நாள் சூட்டிங் மீதம் உள்ளதாகவும் அதில் தான் இணைந்துள்ளதாகவும் இரு தினங்களுக்கு முன்பு நடிகை சினேகா அப்டேட் தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் தான் விஜய்யுடன் அனைத்து காட்சிகளிலும் நடித்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இவரது இசையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக விசில் போடு பாடல் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
விஜய் செலக்ட் செய்த ட்யூன்?: முன்னதாக இந்த பாடலுக்கான நான்கு ட்யூன்களை யுவன், விஜய்க்கு அனுப்பியதாகவும் அதில் விஜய் செலக்ட் செய்த ட்யூனை தான் விசில் போடு பாடலில் யுவன் உபயோகித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, விஜய் பிறந்தநாள் வரும் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ள சூழலில் அன்றைய தினம் இந்த படத்தின் இரண்டாவது பாடல் அல்லது படத்தின் டீசர் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த பாடல் விஜய் மற்றும் திரிஷா இடையிலான பாடலாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாடலுடன் விஜய் பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பாடகி பவதாரணி: சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவின் தங்கை பவதாரணி உடல் நலக்குறைவால் மறைந்தார். முன்னதாக பவதாரணியை சென்னையில் இருக்கும் போது மருத்துவமனையில் சென்று சந்தித்த யுவன் சங்கர் ராஜா, அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கோட் படத்தில் பவதாரணி பாடுவதற்கு ஒரு பாடலை தான் வைத்துள்ளதாகவும் விரைவில் குணமடைந்து வந்து அந்த பாடலை பாடி கொடுக்கும் படியும் கூறியுள்ளார். இதை தொடர்ந்து உடல்நல குறைவால் சிகிச்சைக்காக இலங்கை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட பவதாரணி அங்கேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பவதாரணி வாய்சில் கோட் பட பாடல்: இந்நிலையில் பவதாரணிக்கு கொடுத்த வாக்கிற்கு தக்கபடி அவருக்கு அஞ்சலி செலுத்தும்படி யுவன் சங்கர் ராஜா தற்போது கோட் படத்தில் பவதாரணியின் வாய்ஸை ஏஐ டெக்னாலஜி மூலம் பயன்படுத்தியுள்ளார். இதனால் பவதாரணியின் வாய்ஸில் கோட் படத்தில் ஒரு பாடல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் அழகான குரலுக்கு சொந்தக்காரராக பல சிறப்பான வெற்றி பாடல்களை பாடியுள்ளார் பவதாரணி. மயில் போல பொண்ணு ஒண்ணு என்று அவர் தன்னுடைய குரலில் பாடிய பாடலை ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது. இந்நிலையில் விஜய்யின் கோட் படத்தில் பவதாரணியின் பாடல் அமைந்துள்ளது குறித்து ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











