சூப்பரான அம்மா சென்டிமெண்ட் பாட்டு... வலிமை படத்தோட அப்டேட்டை வெளியிட்ட யுவன்

சென்னை : தல அஜித் நடிப்பில் வலிமை படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் சூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும் இன்னும் சில காட்சிகளே மீதம் உள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் அப்டேட் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குறிப்பிட்டுள்ளார்.

பிங்க் படத்தின் ரீமேக்

பிங்க் படத்தின் ரீமேக்

தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவரது நடிப்பில் கடந்த 2019ல் வெளிவந்த நேர் கொண்ட பார்வை படம் ரசிகர்களின் வரவேற்பை சிறப்பாக பெற்றது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவந்த பிங்க் படத்தின் ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட்டது.

இசையமைப்பாளர் யுவன்

இசையமைப்பாளர் யுவன்

தற்போது எச் வினோத் டைரக்ஷனில் பாலிவுட்டின் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் தல. கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு, பாவல் நவகீதன் ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மியூசிக் செய்துள்ளார்.

படத்தின் அப்டேட்

படத்தின் அப்டேட்

கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட்டிற்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்நிலையில் க்ளப்ஹவுசில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் படம் குறித்த முக்கியமான அப்டேட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

அஜித் ரசிகர்கள் ஆர்வம்

அஜித் ரசிகர்கள் ஆர்வம்

படத்தில் தன்னுடைய இசையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அம்மா சென்டிமெண்ட் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அஜித் படத்திலும் இதுபோன்ற பாடல் இடம்பெற்றதில்லை என்பதால் அந்த பாடல் எப்படி வந்திருக்கும் என்பதை அறிய அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X