»   »  எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்

எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.பி.பி. விவகாரம் குறித்து இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளனர்.

தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை மேடையில் பாடக் கூடாது என்று கூறி இசைஞானி இளையராஜா எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

Music directors meet Ilaiyaraja over SPB row

இதையடுத்து இனி இளையராஜா பாடல்களை பாடப் போவது இல்லை என எஸ்.பி.பி. அறிவித்தார். இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் இசையமைப்பாளர்கள் இளையராஜாவை அவரது இலத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.

அந்த சந்திப்பின்போது இசையமைப்பாளர்கள் தங்களின் ஆதரவை இளையராஜாவுக்கு தெரிவித்துள்ளனர். காப்புரிமை குறித்து இசையமைப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்துள்ளார்களாம்.

இது குறித்து இளையராஜாவே செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

English summary
Music directors have met Isaignani Ilaiyaraja over SP Balasubramanian row.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil