“எப்படி சாதித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்“.. இசைபுயலின் 55வது பிறந்த நாளில் சுவாரசியமான தகவல்கள் !

சென்னை : இசை உலகின் முடிசூடா மன்னாக வலம் வரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஷ்மான் இன்று தனது 55வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள், நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவரின் பிறந்த நாளையொட்டி சமூக வலைத்தளங்களான பேஸ் புக், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றில் இவர் இசையமைத்த பாடலை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நாளில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தெரியாத சில சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாமா?

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையில் 1966ம் ஆண்டு ஜனவரி 6ந்தேதி பிறந்தார். அவரின் இயற்பெயர் திலீப் குமார். இவரது தந்தை பெயர் சேகர். இவர் மலையாள இசைத்துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போது இவருடைய தந்தை இறந்துவிட்டதால், தந்தையின் இசைக்கருவியை வாடகைக்கு விட்டு இசையை கற்கத் தொடங்கினார்.

மதத்தின் மீது ஈர்ப்பு

மதத்தின் மீது ஈர்ப்பு

தந்தையை இழந்து பரிதவித்து வந்த நேரத்தில் சசோகரிக்கு கடுமையான நோயால் அவதிப்பட்டார். அந்த நேரத்தில் நண்பன் ஒருவரின் ஆலோசனையின் பேரில் மசூதிக்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்டார். இதையடுத்து, தங்கை முற்றிலும் குணமடைந்ததால், இஸ்லாம் மதத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இவரது குடும்பம் இஸ்லாம் மதத்திற்கு மாறியது. இதன் பிறகே திலிப்குமார் என்ற பெயரை ஏ.ஆர்.ரஹ்மான் என்று மாற்றிக்கொண்டார்.

இளையராஜாவின் இசைக்குழுவில்

இளையராஜாவின் இசைக்குழுவில்

தனது 11வது வயதில் இளையராஜாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சென்றார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, குன்னக்குடி வைத்தியநாதன் போன்ற இசைக்கலைஞர்களிடம் பணியாற்றினார். இசையின் மீது இருந்த காதலால், டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் இசைத்துறையில் பட்டமும் பெற்றார்.

தேசிய விருதை வென்றார்

தேசிய விருதை வென்றார்

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைத் திறமையைக் கண்டறிந்தவர் மணிரத்னம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலாக ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலின் மூலம் தனது ஆசைக்கு விதை போட்டார். முதல் படமே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் 25,000 ரூபாய்.

எல்லா புகழும் இறைவனுக்கே

எல்லா புகழும் இறைவனுக்கே

தமிழ்,இந்தி,தெலுங்கு,மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் இசை புயல் என்றும் அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டார். 2009ம் ஆண்டு ஸ்லாம் டாக் மில்லினியர் படத்தில் இசையமைத்தற்காக திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை பெற்றார். விருது வழங்கும் விழாவில் எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசி ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் திருப்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஒரே நாளில் பிறந்த நாள்

ஒரே நாளில் பிறந்த நாள்

மனைவி பெயர் ஷெரினா பானு, காதிஜா, கீமா ரகுமானியா என்ற இரண்டு மகள்களும் அமின் என்ற ஒரு மகனும் உள்ளார்.இதில் அமினும் ஜனவரி 6ந் தேதி தான் பிறந்தார்.அப்பா, மகன் இருவருக்கும் இன்றுதான் பிறந்தநாள்.

அல்லா ரக்கா ரஹ்மான்

அல்லா ரக்கா ரஹ்மான்

மார்காமில் உள்ள ஒரு தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் நினைவாக 'அல்லா ரக்கா ரஹ்மான் தெரு' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் தனது திறமை, அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றால் புகழின் உச்சியில் இருக்கிறார். அவரின் 56வது பிறந்த நாளான இன்று பிலிம் பீட் சார்பாக நாமும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக்கொள்வோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X