'இசை ஓடிடி' வழியாக..இல்லம் தேடி வருகிறார் இளையராஜா.. அவர் பாடல்கள் பற்றிய ஏ டூ இசட் தகவலாம்!

By

சென்னை: இசை ஓடிடி வழியாக, உங்கள் இல்லம் தேடி வருகிறேன் என்று இசை அமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Ilayaraja Birthday special | Best BGMs of Ilayaraja | Happy Birthday Ilayaraja

இளையராஜவுக்கு இன்று 77 வது பிறந்த நாள். இதையடுத்து அவருக்கு ஏராளமானவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விரைவில் 'இசை ஓடிடி' (ISAI OTT) என்ற டிஜிட்டல் தளம் மூலம் ரசிகர்களை நேரடியாக சந்திக்க இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

கொரோனா

கொரோனா

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே, உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் கொரோனா காலகட்டம் பிரித்து வைத்திருக்கிறது. இருந்தாலும் உங்கள் அன்பு உள்ளங்களை அறிவேன். உங்களுடேனேயே, இசை வடிவில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

இல்லம் தேடி

இல்லம் தேடி

'இசை ஓடிடி' மூலமாக நானே உங்கள் இல்லம் தேடி வர இருக்கிறேன். புதிதாகத் தொடங்க இருக்கிற இந்த ஓடிடி தொடர்பான செய்தியை, என் பிறந்த நாளில் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இசை ஓடிடியில் ஒவ்வொரு பாடலும் எப்படி உருவானது என்ற அரிய பெரிய விஷயங்களும் ஒவ்வொரு பாடலிலும் என்னென்ன நிகழ்வுகள் நடந்தது என்பதும் அதை பதிவு செய்ய எவ்வளவு சிரமப்பட்டோம் என்ற தகவல்களும் இருக்கும்.

இசைக் கலைஞர்கள்

இசைக் கலைஞர்கள்

அதில், யார் யாரெல்லாம் எப்படியெப்படி உழைத்திருக்கிறார்கள் என்பதை பற்றியும் அது உருவாவதற்கு காரணமாக இருந்தவர்கள் யார் யாரென்றும்.. இதுபோன்ற வேறு எங்கும் கேட்க முடியாத தகவல்களை இந்த இசை ஓடிடி தாங்கி வரும். உலக மாபெரும் இசைக் கலைஞர்களும் என்னைப் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள்.

வீண்போகாது

வீண்போகாது

இதெல்லாம் உங்கள் வீடு தேடி வருகிறது, ஓடிடி மூலமாக. அந்த நாளுக்கு காத்திருங்கள். காத்திருந்தாலும் அது வீண்போகாது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய அனுபவங்களையும் தொடர்புகளையும் நான் உங்களுடன் நேரடியாக பகிர்ந்துகொள்ள உங்கள் வீடு தேடி வந்துகொண்டிருக்கிறேன். நன்றி. இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

டிரைலர் போலவே

டிரைலர் போலவே

1000 படங்கள், 40 வருடம், 9 மொழிகள், 105 ஆடியோ கம்பென்கள், 635 தயாரிப்பு நிறுவனங்கள், பஞ்சமுகி ராகம், 7000 பாடல்கள் 5 தேசிய விருதுகள், 225 பாடலாசிரியர்கள், 360 இயக்குனர்கள், 413 பாடகர்கள், சிம்பொனி இசை என ஒரு டிரைலர் போலவே அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த இசை ஓடிடி விரைவில் வெளியாக இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X