twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜாவுக்கு 77 வது பர்த் டே.. புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே.. உணர்வுகளைப் பேசும் மொழி!

    By
    |

    சென்னை: 'இசை குறிப்பிட்ட வார்த்தைகளைப் பேசாத மொழி. ஆனால் உணர்வுகளைப் பேசும்' என்கிறார் ஆங்கில இசைக் கலைஞர் கீத் ரிச்சர்ட்ஸ்.

    Recommended Video

    Ilayaraja | Special Olympics | பிறப்பால் அனைவரும் சமம் தான்- இளையராஜா அதிரடி பேச்சு- வீடியோ

    அப்படித்தான் இளையராஜாவின் இசையும். அது காதல், சோகம், ஏக்கம், கோபம், தாலாட்டு என உணர்வுகளைப் பேசுகிற, மாய மொழி.

    அந்த மொழி உங்களை மூழ்கடிக்கும். அதில் சுகமாக மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் போது அதுவே உங்களை மீட்கும். இப்படி எல்லாமுமாக இருக்கிறது, இளையராஜா என்கிற இசை.

    முதல்வருக்கு நன்றி.. சின்னத்திரை தொழிலாளர்களுக்கு கோவிட்-19 காப்பீடு.. பெப்சி அறிக்கை! முதல்வருக்கு நன்றி.. சின்னத்திரை தொழிலாளர்களுக்கு கோவிட்-19 காப்பீடு.. பெப்சி அறிக்கை!

    காதல் தெய்வம்

    காதல் தெய்வம்

    70, 80, 90 காலகட்டங்களில் அந்தந்த கால இளைஞர்களுக்கு இளையராஜாதான் காதல் தெய்வம். இப்போதும்தான். அவர் பாடலைப் பாடிதான், பலர் தங்கள் காதல் வளர்த்தார்கள். பலர் கவலை மறந்தார்கள், பலர் சோகத்தில் சுழன்றார்கள். அந்தப் பலரில் இப்போது நாற்பதைத் தாண்டியும் ஐம்பதை தாண்டியும் இன்னும் பல வயதுகளைத் தாண்டியும் வசிய ராஜாவின் பாடல்களில் வாழ்வைக் கழித்துக் கிடக்கிறார்கள்.

    பயிர்களுக்கு இடையில்

    பயிர்களுக்கு இடையில்

    அவரது ஒவ்வொரு பாடல்களிலும் உயிர் இருக்கிறது. அது நம்மை, நிற்க வைத்து பேசுகிறது, சிரிக்கிறது, மெய்மறக்க வைக்கிறது, எங்கோ கொண்டு செல்கிறது. அவர் இசையை கேட்கும்போதுதான், வயல் வரப்புகளில் பயிர்களுக்கு இடையில் நடப்பதாக, ஓடும் மேகத்துக்குள் தாங்களும் மிதப்பதாக, சலசலத்து ஓடும் ஆறுகளிலும் கால்வாய்களிலும் அங்கும் இங்கும் செல்லும் மீன்களோடு பேசிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது என்கிறார்கள் பலர்.

    எப்போதும் ஆறுதல்

    எப்போதும் ஆறுதல்

    கான்கிரீட் காடுகளுக்குப் பிழைக்க வந்து மூளையையும் கவலையையும் நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு, மனசைப் பட்டினிப் போட்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான மனிதர்களுக்கு இளையராஜாதான் எப்போதும் ஆறுதல்.

    அப்பாற்பட்டது

    அப்பாற்பட்டது

    அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஆஸ்திரேலியாவிலும் வேறெங்கோ இருக்கிற சிறு தீவிலும் கூட ஏதாவது ஒரு வீட்டில், அலுவலகத்தில் ராஜா பாடல் ஒலிப்பதைக் கேட்க முடியும் என்கிறார்கள், புலம் பெயர் தமிழர்கள். உயர் பதவியில் இருக்கிற பலரில் இருந்து சாதாரணக் கூலி தொழிலாளி வரை அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிற ராஜாவின் இசையை என்ன சொல்லி பாராட்டி விட முடியும்? அது, அதற்கெல்லாம் அப்பாற்பட்டது, ராஜாவைப் போலவே.

    இசை மொழி

    இசை மொழி

    தமிழ் அடையாளத்தை, தமிழ் மக்களின் வாழ்வியல் இசையை, தனது தனித்துவ இசை மொழியில் சொன்னவர் இசை ராஜா. அதனால்தான் அவரது பாடல்கள், ஆன்மாவுக்குள் ஆழமாக ஊடுருவும் ஆற்றல் பெற்றிருக்கிறது. அவரே பாடுவது போல, புதுராகம் படைப்பதாலே அவரும் இறைவன்தான்! இசையை வாழ்த்துவதும் ராஜாவை வாழ்த்துவதும் ஒன்றுதான் என்பதால் நாம் இசையை வாழ்த்துவோம், அது ராஜாவையும் சேர்த்துதானே! வாழ்த்துக்கள் ராசா!

    English summary
    The musical maestro Ilaiyaraaja is celebrating his 77th birthday today,many celebrities and fans are greeting the star on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X