»   »  விஜய் ரசிகர்களுக்கு அக்டோபர் 17ல் இசை விருந்து: ஜி.வி. பிரகாஷ் ப்ளான்

விஜய் ரசிகர்களுக்கு அக்டோபர் 17ல் இசை விருந்து: ஜி.வி. பிரகாஷ் ப்ளான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 59 படத்திற்கு இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், விஜய் ரசிகர்களுக்கு விருந்து தரப்போகிறாராம். தான் இசையமைக்கும் 50வது படமென்பதால் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி டியூன்களை போட்டிருக்கிறாராம். செம குத்துப்பாடலான ‘உலக லோக்கல் தர டிக்கெட்' பாடலின் வரிகளை அக்டோபர் 17ம் தேதி வெளியிடப் போகிறாராம் ஜி.வி.பிரகாஷ்.

புலி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

விஜய் 59

விஜய் 59

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 59 என்று அழைத்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சிவாஜி இல்லத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது.

ஜி.வி.பிரகாஷ் 50

ஜி.வி.பிரகாஷ் 50

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இது இவரது 50வது படம் என்பதால் இந்த படத்தின் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

தலைவா விஜய்

தலைவா விஜய்

ஜி.வி.பிரகாஷ் இசையில் தலைவா படத்தில் விஜய் பாடிய ‘வாங்கண்ணா...' என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. தற்போது இதை விட சிறப்பான பாடல் ஒன்றுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

அக்டோபர் 17 ரிலீஸ்

இந்த பாடல் உலக லோக்கல் தர டிக்கெட்!! வகையை சார்ந்ததும் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்றும் கூறப்படுகிறது. எனவே இதற்கான பாடல் வரிகளை இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அக்டோபர் 17ம் தேதி அறிவிக்க இருப்பதாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

உலக லோக்கல் தர டிக்கெட்

உலக லோக்கல் தர டிக்கெட்

விஜய்யை கிழி டான்ஸ் லுக்கில் பார்க்க நினைப்பவர்களுக்காக, ‘உலக லோக்கல் தர டிக்கெட் பாடல் காத்திருக்குதுடி செல்லக்குட்டீஸ்'. என ட்விட்டரில் ஜி.வி.பிரகாஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இப்போது பாடலின் வரிகளை ரிலீஸ் செய்ய இருக்கிறார். விஜய் 59 இப்படத்தில் தேசிய விருது பெற்ற உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஒரு பாடல் வேறு இருப்பதால் குழந்தை பாடுவது போன்ற ஒரு பாடலும் படத்தில் இருக்கிறதாம்.

English summary
On Oct 17th ! Will reveal ilayathalapathys opening song lyric ... #ulagalocaltharaticket !! Semma dance by Vijay saw visuals!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil