twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கனவுகளை துரத்திய இசைஞானி... நினைவுகளைக் கொடுத்த இசைக்கலைஞன்!

    By Deepa
    |

    சென்னை : தள லல லா என்று என்று ஸ்ருதி சேர தவிக்கும் இசையமைப்பாளரின் ஆரம்ப நேர தவிப்புடன் தான் ஆரம்பிக்கும் நிழல்கள் படத்தின் அந்த பாடல்.

    ஆனால் பாடலில் முதல் வரிக்கு ஏற்ப மடை திறந்து தாவும் நதியலையை போல நமக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

    இசைஞானி இளையராஜாவுக்காகவே அந்த பாடல் படைக்கப்பட்டதாக நமக்கு அந்த பாடல் ஏற்படுத்தும் உணர்வை புறந்தள்ள முடியாது.

    எனக்கு ரேடியோ என்பது ரேடியோ அல்ல இசைஞானி - ஒரு ரசிகனின் வாழ்த்துஎனக்கு ரேடியோ என்பது ரேடியோ அல்ல இசைஞானி - ஒரு ரசிகனின் வாழ்த்து

     வித்தியாசமான உணர்வுகள்

    வித்தியாசமான உணர்வுகள்

    இளையராஜாவின் இசை தரும் சுகமான அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. யாருமற்ற தனிமைப் பொழுதுகளில் ஒருவிதமான உணர்வையும், அனைவரும் இருக்கும் பொழுதுகளில் வேறுமாதிரியான உணர்வையும் அவரது இசை நமக்கு கொடுக்கும். வாழும் போதே சாகும் உணர்வையும் சாகும் நேரத்திலும் வாழ வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுக்கும் இசைஞானியின் இசை.

     இசைக்கு புது வடிவம்

    இசைக்கு புது வடிவம்

    ஏராளமான இசைக் காவியங்களை அவர் நமக்காக கொடுத்துள்ளார். அன்னக்கிளி படத்துக்கு முன்பு இருந்த இசை சூழலை தன்னுடைய இசையால் மாற்றிக் காட்டினார். எம்எஸ்வி காலத்தில் இருந்த இசைக்கு புது வடிவம் கொடுத்து இசை மூலம் நம்மை தாலாட்டினார். தாயின் மடி கிடைக்காதவர்களுக்கு தன்னுடைய இசை மற்றும் பாடல்களின் மூலம் அதை கொடுத்து தாலாட்டினார்.

     மடை திறந்து தாவிய நதியலை

    மடை திறந்து தாவிய நதியலை

    இந்த வகையில் தமிழ் சினிமா உலகத்தில் சில பாடல்கள் அவரை தனியாக பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ள பாடல்தான் 'நிழல்கள்' படத்தில் வரும் மடை திறந்து தாவும் நதியலை பாடல். இதில் இளையராஜாவையே நாம் நிழலில் காண முடியம். அந்த பாடலில் சில நொடிகள் நிஜத்திலும் அவர் ரசிகர்களை தாலாட்டுவார்.

     கண்களால் வெளிப்படுத்திய உணர்வுகள்

    கண்களால் வெளிப்படுத்திய உணர்வுகள்

    இந்த பாடலில் கனவுகளை துரத்தும் இசைக்கலைஞனின் உண்மையான உணர்வுகளை அப்படியே காண முடியும். பாடலில் வரும் நடிகர் சந்திர சேகர் இளையராஜாவாகவே வாழ்ந்திருப்பார். முதல் வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற இசைக் கலைஞனை, அவரது உணர்வுகளை தன்னுடைய கண்களாலேயே வெளிப்படுத்தியிருப்பார் சந்திரசேகர்.

     வாழ்க்கை கனவு

    வாழ்க்கை கனவு

    பாடல் எடுக்கப்பட்ட விதமும் பிரத்யேகமாக இருக்கும். அந்த கால வழக்கப்படி வெள்ளை உடையணிந்த தேவதைகள் நடனமிட்டுக் கொண்டு வருவார்கள். அதிலும் ஒரு டிவிஸ்ட். இதில் மஞ்சள் உடையணிந்த தேவதைகள் வலம்வருவார்கள். ஒரு இசையமைப்பாளருக்கு கிடைக்கும் சரியான வாய்ப்பு எப்படி அவருடைய வாழ்க்கையை மாற்றும் என்பதை நாயகனின் கனவின்மூலம் கண்முன்னே கொண்டுவந்திருப்பார் டைரக்டர்.

     டிரம்ஸ் புருஷோத்தமன்

    டிரம்ஸ் புருஷோத்தமன்

    இந்தப் பாடலுக்கு டிரம்ஸ் அமைத்தவர் இளையராஜாவின் இசைக்குழுவில் இடம்பெற்ற ஆஸ்தான இசைக்கலைஞர் புருஷோத்தமன். சிங்கப்பூரிலிருந்து தருவித்த ரோட்டோ டிரம்சை கொண்டு இந்தப் பாடலில் மாயாஜாலம் செய்திருப்பார் புருஷோத்தமன். இடையிடையே அவருடைய கை வித்தையும் பாடலின் ஊடே நமக்கு காட்டப்படும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

     ராஜாவின் கர்வம்

    ராஜாவின் கர்வம்

    பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் வாலிப கவிஞர் வாலி. இளையராஜாவை அப்படியே எழுத்துக்களில் வடிவமைத்திருப்பார். புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்று ராஜாவின் கர்வத்தையும் பாடலில் கொண்டு வந்திருப்பார். மற்றவர்களாக இருந்தால், நாம் கோபப்பட்டிருப்போம் ஆனால் சொல்லப்பட்டது ராஜா குறித்து என்பதால் அதை ஏற்றுக் கொள்வதைவிட நமக்கு வேறு வழியில்லை.

     உற்சாகம் துள்ளும் பாடல்

    உற்சாகம் துள்ளும் பாடல்

    இதேபோல பாடலை பாடியிருப்பவர் எஸ்பிபி. சொல்லவே தேவையில்லை. சாதாரண பாடல்களிலேயே புகுந்து விளையாடுவர் இவர். அதிலும் ராஜா குறித்த பாடல் என்பதாலேயோ என்னவோ இவருடைய பாடலில் உற்சாகம் துள்ளும். பார்க்கும் நமக்கும் உற்சாகம் பற்றிக் கொள்ளும். சோகமான நேரங்களில் இந்த பாடலை கேட்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது என்று கூறலாம்.

    English summary
    Musician Ilayaraja makes every happy with his songs
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X