twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெல்லிசை மன்னர் எம்எஸ்வி எனும் இசைக்கடல்.. பிறந்தநாள் இன்று..! திரைவாழ்க்கை ஓர் பார்வை!

    |

    சென்னை: மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் அவர்களின் 91வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    மெல்லிசை மன்னர், எம்எஸ்வி என அழைக்கப்படும் எம்எஸ் விஸ்வநாதன் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு பிறந்தார். 1953ஆம் ஆண்டு வெளியான ஜெனோவா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

    தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 1700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் எம்எஸ் விஸ்வநாதன். தொடக்கத்தில் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் இசைக்குழுவில் ஆர்மோனியம் வாசிப்பவராக பணபுரிந்தார் எம்எஸ்வி.

    முடித்துக்கொடுத்த எம்எஸ்வி-ராமமூர்த்தி
    பாதியில் நின்ற படங்கள்

    சி.ஆர் சுப்புராமன் உடல்நலக்குறைவால் திடீரென மரணமடைய அவர் இசையமைக்க ஒப்புக்கொண்ட தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்கள் பாதியில் நின்றன. இதைத்தொடர்ந்து அவரின் உதவியாளர்களாக இருந்த எம்எஸ் விசுவநானும் ராமமூர்த்தியும் இசையமைத்து படத்தை முடித்துக்கொடுத்தார்கள்.

    தனியாக 950 படங்கள்

    தனியாக 950 படங்கள்

    விஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார்.

    மெல்லிசை மன்னர்கள்

    மெல்லிசை மன்னர்கள்

    ராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு எம்எஸ்வி இசையமைத்துள்ளார். மெல்லிசை மன்னர்கள் என எம்எஸ் விஸ்வநாதனுக்கும், ராமமூர்த்திக்கும் 1963ஆம் ஆண்டு இணைந்து பட்டம் வழங்கப்பட்டது. இதனை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வழங்கினார்.

    பாடல்கள் பாடியுள்ளார்

    பாடல்கள் பாடியுள்ளார்

    எம்எஸ் விஸ்வநாதன் காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இளையராஜா, ஏஆர் ரஹ்மான் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார் எம்எஸ்வி.

    எம்எஸ்வி மறைவு

    எம்எஸ்வி மறைவு

    2015ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் தேதி எம்எஸ் விஸ்வநாதன் மறைந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் சென்னையில் அவர் உயிர் பிரிந்தது.

    பத்ம விருது வழங்கப்படவில்லை

    பத்ம விருது வழங்கப்படவில்லை

    இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பலமுகங்களை கொண்ட எம்எஸ் விஸ்வநாதன், கவியரசர் கண்ணதாசனின் நெருங்கிய நண்பர் ஆவார். இசைக்கடல், இசை எனும் நதி எனப் போற்றப்படும் எம்எஸ்விக்கு ஒரு பத்ம விருது கூட கிடைக்கவில்லை என்பது ரசிகர்களின் நீங்கா துயரம்.

    English summary
    Musician MS Viswanathan birthday has been celebrates today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X