இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன வித்தியாசம் - மனம் திறந்த இசைக்கலைஞர்

சென்னை: இளையராஜா எல்லோரையும் அடிப்போல்தான் நடத்துவார் என இசை கலைஞர் சங்கர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் இளையராஜா ஒருவர். அன்னக்கிளி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர் 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக இப்போதும் களத்தில் இருந்துவருகிறார் இளையராஜா.

இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா

கோலிவுட்டின் இசையை மாற்றி அமைத்தவர் இளையராஜா. அவர் வந்த பிறகுதான் நாட்டுப்புற இசையும், கிராமத்து சத்தங்களும் தமிழ் சினிமா இசைக்குள் வந்தன என பலர் கூறுவது உண்டு. பண்ணைபுரம் என்ற கிராமத்திலிருந்து அவர் வந்திருந்தாலும் அனைத்துவிதமனா இசையையும் முறையாக கற்று மேஸ்ட்ரோ பட்டம் வாங்கியவர். இளையராஜாவின் இசை தலைமுறைகல் தாண்டி ரசிக்கப்படுகிறது.

இளையராஜா இசையமைத்திருக்கும் விடுதலை

இளையராஜா இசையமைத்திருக்கும் விடுதலை

இளையராஜா தற்போது வெற்றிமாறன் இயக்கியிருக்கும் விடுதலை திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின் ட்ரெய்லரில் இளையராஜாவின் பின்னணி இசை அனைவரையும் கவர்ந்தது. மேலும், படத்தில் இடம்பெற்றிருக்கும் உன்னோடு நடந்தா, காட்டுமல்லி, அருட்பெருஞ் ஜோதி ஆகிய பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும், படத்தின் முழுமைக்கும் இளையராஜா எவ்வாறு இசையமைத்திருக்கிறார் என்பதை காண்பதற்கு ஆவலோடு இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு அவரது இசை பலரையும் தட்டி எழுப்பியிருக்கிறது.

இளையராஜா பேசினாலே சர்ச்சைதானா?

இளையராஜா பேசினாலே சர்ச்சைதானா?

இப்படி இசையமைப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளையராஜா மீது அதே ரசிகர்களில் ஒரு தரப்பினர் விமர்சனங்களும் வைப்பதுண்டு. இளையராஜா யாரையும் மதிக்கமாட்டார், அவருக்கு தலைக்கணம் அதிகம் பலர் கூறுவார்கள். சமீபத்தில் நடந்த விடுதலை ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, 'மைக்கை போட்டுட்டு போயிடுவேன்' என இளையராஜா சொன்னது பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இளையராஜாவின் கோபத்தை பேசும் பலர் அவர் ஏன் அப்படி கோபப்படுகிறார் என்பதை பேசுவதில்லை என ராஜாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இளையராஜா மீது இசைக்கலைஞரின் குற்றச்சாட்டு

இளையராஜா மீது இசைக்கலைஞரின் குற்றச்சாட்டு

இந்நிலையில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரிடம் இசைக்கலைஞராக பணியாற்றிய சங்கர் இளையராஜா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "தான் ஒரு அரசன் என்ற நினைப்பிலேயே இளையராஜா எப்போதும் இருப்பார். எம்.எஸ்.விஸ்வநாத ட்ரூப்பில் இருக்கும்போது ஒரு இசையை எங்களால் வாசிக்க முடியவில்லை என்றால் அதை விட்டுவிடுங்கள் அதே நோட்ஸில் வேறு மாதிரி த்ருகிறேன் என் கூறுவார்.

இளையராஜா அடிமைப்போல் நடத்துவார்

இளையராஜா அடிமைப்போல் நடத்துவார்

ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. அவர் கொடுக்கும் இசையை நாங்கள் வாசித்துதான் ஆக வேண்டும். இளையராஜா நோட்ஸ் எழுதிக்கொண்டிருக்கும்போது யாராவது சிறிய அளவில் தும்மினால்கூட ஒருமாதிரி பார்த்து ஏன் இப்படி தொந்தரவு செய்கிறீர்கள் என கேட்பார். அவர் அடிமைப்போல்தான் நடத்துவார். ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் அப்படி இல்லை. அவர் ரொம்பவும் நல்ல பையன்" என்றார். தற்போது அவரது இந்தப் பேட்டி பேசுபொருளாக மாறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X