twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேரளாவிலும் விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு

    By Chakra
    |

    Viswaroopam
    திருவனந்தபுரம்: கேரளாவில் விஸ்வரூபம் திரைப்படம் நேற்று முதல் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று மதியம் தமிழ்நாட்டில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் கேரளா மாநில நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அங்கேயும் படத்துக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

    இதைத் தொடர்ந்து முதல்வர் உம்மன்சாண்டியை அம்மாநில முஸ்லிம் லீக் நிர்வாகிகள் நேற்று இரவு கேரள சந்தித்து படத்துக்குத் தடை விதிக்கக் கோரினர்.

    மேலும் கேரள உள்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருடன் அமைச்சர் குஞ்ஞாலிகுட்டி, ஈ.டி.பஷீர் எம்.பி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

    இதையடுத்து இன்று விஸ்வரூபம் திரைப்படத்தை அதிகாரிகளுடன் பார்த்து விட்டு மாலைக்குள் முடிவை அறிவிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

    English summary
    Muslim bodies in Kerala have urged the government to ban Viswaroopam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X