Don't Miss!
- News
குடியரசு தினத்தை முன்னிட்டு 1091 உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியீடு!
- Lifestyle
ருசியான... சோயா பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?
- Automobiles
அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது
- Sports
உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் நான் தான்.. விராட் கோலியே எனக்கு பின்னாடி தான்.. பாக். வீரர் பேட்டி
- Finance
FII வெளியேற்றம், பட்ஜெட் 2023, பொருளாதார அச்சம்.. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிவு!
- Technology
நல்ல மாசம் பொறக்குது.. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 17 புதிய போன்கள் அறிமுகம்.. இதோ ஃபுல் லிஸ்ட்!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
அப்படி டிரெஸ் அணிவதால் யாரும் எனக்கு வீடு வாடகைக்கு தரமாட்றாங்க.. பிக் பாஸ் நடிகை புலம்பல்!
மும்பை: கிடைக்கிற பிளாஸ்டிக் கவர், சோடா பாட்டில் மூடி, வாட்ச்கள், போட்டோக்களை கூட விட்டு வைக்காமல் ஆடையாக மாற்றி ரசிகர்களை அதிர வைத்து வரும் கவர்ச்சி புயல் உர்ஃபி ஜாவேத்துக்கு மும்பையில் யாருமே தற்போது வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என சொல்லி விட்டார்கள் என புலம்பி உள்ளார்.
பிக் பாஸ் ஓடிடி மூலம் பிரபலமானவர் டிவி நடிகை உர்ஃபி ஜாவேத். பிக் பாஸில் கிடைத்த வாய்ப்பை வைத்து பாலிவுட் நடிகையாக ஆகிவிடலாம் என நினைத்த அவர் டாப்லெஸ் ஆக வீடியோக்களை எடுத்துப் போட்டு சென்ஷேஷனல் ஆகி விட்டார்.
ஆனால், அதே சமயம் அத்துமீறிய ஆபாசமாக வெளி இடங்களுக்கே வர துணிந்து விட்ட அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகளும் போலீஸ் புகார்களும் கிளம்பி உள்ளன.
என்னடா இது.. ரெண்டு ஜிகினா ஸ்டிக்கர் தான் டிரெஸ்ஸா.. எல்லை மீறும் உர்ஃபி ஜாவேத்.. கடுப்பான ஃபேன்ஸ்!

துணியே தேவையில்லை
மேலாடை இல்லாமல் ஸ்மார்ட் போன்களையும், ஒயின் கிளாஸ்களையும் சாப்பிடும் பிளேட் மற்றும் ஜூஸ் கிளாஸ் வைத்து தனது முன்னழகை மறைத்தபடி படு கவர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு இணையத்தில் எக்கச்சக்க லைக்குகளை அள்ளி வருகிறார் நடிகை உர்ஃபி ஜாவேத். பிகினி உடைகளை தாண்டி படு ஆபாசமாக டாப்லெஸ் ஆகவே வீடியோக்களை வெளியிடுவது மட்டுமின்றி பொது இடங்களுக்கும் மேலாடை அணியாமல் எதையாவது வைத்து மர்ம உறுப்புகளை மட்டும் மறைத்துக் கொண்டு செல்வதால் இவருக்கு சமீப காலமாக ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகி உள்ளன.

சொந்த வீடு இல்லையாம்
உர்ஃபி ஜாவேத் கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார் என நினைத்த ரசிகர்களுக்கு இதுவரை தனக்கு ஒரு சொந்த வீடு கூட இல்லை என்றும் வாடகை வீட்டையே தேடி தேடி தேய்ந்து விட்டேன் என புலம்பியபடி போட்டுள்ள ட்வீட் பலரையும் ஷாக் ஆக்கி உள்ளது. மேலும், தனக்கு யாரும் வாடகைக்கு வீடு தரக்கூட மாட்றாங்க என கதறி இருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.

முஸ்லிம் மற்றும் இந்துக்கள்
முஸ்லிம்கள் நான் கவர்ச்சியாக ஆடை அணிவதால் எனக்கு வீடு வாடகைக்கு தர மாட்றாங்க, அதே போல இந்துக்கள் நான் முஸ்லிம் என்பதால் எனக்கு வீடு வாடகைக்கு கொடுக்க மாட்றாங்க.. மற்ற மதத்தினரோ எனக்கு வரும் மிரட்டல்கள் காரணமாக வாடகைக்கு வீடு கொடுத்தால் சிக்கல் வரும் என அஞ்சுகின்றனர். இந்த மும்பையில் வாடகைக்கு வீடு தேடுவதே பெரும் கஷ்டமாக மாறிவிட்டது என ட்வீட் போட்டுள்ளார்.

நல்லா வேணும்
யாரையும் மதிக்காமல் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டால் இப்படித்தான் என்றும் எங்க வீடு ஃப்ரீயாத்தான் இருக்கு.. வேணும்னா வந்து தங்கிக்கோங்க காசு கூட வேண்டாம் என்றும் நல்லா வேணும் ஒருத்தனும் உனக்கு வீடு வாடகைக்கு கொடுக்கவே கூடாது என நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

முகம் வீங்கிப் போச்சு
ரைசா வில்சனுக்கு முகம் வீங்கிப் போனது போல நடிகை உர்ஃபி ஜாவேத்துக்கும் சமீபத்தில் அலர்ஜி காரணமாக முகமே வீங்கிப் போய்விட்டது. அந்த போட்டோவை அவர் ஷேர் செய்த நிலையில், அப்படியே மேக்கப் போடாத ராக்கி சாவந்த் மாதிரி ஆகிட்டீங்க என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
-
துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி..பொதுமக்களிடம் தர்ம அடி.. வசமாக சிக்கிய இளைஞன்!
-
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திய புரட்சித் தளபதி விஷால்.. என்ன ஆச்சு?
-
அதிர்ச்சி.. இளம் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா விஷம் குடித்து தற்கொலை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு