முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டுவதா? இதுபோன்ற படத்தில் விஜய் நடிக்கக்கூடாது.. ரசிகர்கள் அட்வைஸ் !
சென்னை : முஸ்லீம்களை தீவிரவாதிகளாக காட்டும் திரைப்படங்களில் விஜய் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பீஸ்ட் திரைப்படத்தில், பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகிபாபு என அனைத்து நடிகர்களும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நெல்சன் திலீப்குமார் படத்தை இயக்கி உள்ளார்.
ஒரு பக்கம் நெக்டிவ்வான விமர்சனமும், ஒரு பக்கம் தளபதியின் ரசிகர்கள் படத்தை கொண்டாடி இணையத்தை திணறடித்து வருகின்றனர்.

பீஸ்ட்டின் கதை
பீஸ்ட் படத்தில், இந்திய ராணுவத்தின் உளவாளியாக நடித்திருக்கிறார் விஜய், ஒரு அசம்பாவிதம் காரணமாக தனது வேலையை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்கு வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஷாப்பிங் மால், தீவிரவாதிகளால் ஹைஜாக் செய்யப்படுகிறது. அதற்குள் மாட்டிக்கொள்ளும் விஜய், பின்பு அங்கிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே பீஸ்ட் படத்தின் கதை.

முஸ்லீம் அமைப்புகள் கண்டனம்
வீரராகவன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். உமர் பாரூக் என்கிற வில்லன் கதாபாத்திரம் புதுமுக நடிகர் ஒருவர் நடித்துள்ளார். உமர் பாரூக் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விபரங்கள் எதுவுமே படத்தில் இல்லை. முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மட்டுமே பீஸ்ட் திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளதாக முஸ்லீம் அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முஸ்லீம்கள் தீவிரவாதிகளா?
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், விஜய் மாதிரி பெரிய ஸ்டார் நடிகர்கள் பொறுப்புடன் படத்தில் நடிக்க வேண்டும். இந்தியா மாதிரியான ஒரு நாட்டுக்குள் இஸ்லாமியர்களை திரும்பத் திரும்ப தீவிரவாதியாகவே காட்றீங்க, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி காட்டப் போறீங்கனு தெரியவில்லை.

ரசிகர் அட்வைஸ்
இந்தியாவில் அரசியலே அப்படித்தான் இருக்கிறது. விஜய் சார்கிட்ட ஒரு பெரிய மாஸ் இருக்கு, ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு, அவர் சொல்வதை ஒரு பெரிய கூட்டம் கேட்கப் போகுது. இதனால் விஜய் தனது பொறுப்பை உணர்ந்து, இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டும் படத்தில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











