மீண்டும் கிராமத்து கெட்டப்பில் களமிறங்கும் கடைக்குட்டி சிங்கம்... படத்தின் புதிய அப்டேட்!
சென்னை : இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துவரும் படம் விருமன்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
படத்தின் சூட்டிங் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக சுல்தான் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது சர்தார் மற்றும் விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

கடைக்குட்டி சிங்கம் படம்
இந்தப் படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து கெட்டப்பில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக கிராமத்து கெட்டப்பில் கடைக்குட்டி சிங்கம் படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மூத்த சகோதரிகளுடன் வாழும் இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இந்தப் படம் பேசியது.

விருமன் படம்
இந்நிலையில் தற்போது முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கிராமத்து கதாபாத்திரங்களை சிறப்பாக வெளிக்கொண்டுவரும் முத்தையா, இந்தப் படத்தில் கார்த்தியை சிறப்பாக பயன்படுத்தி படத்தின் சூட்டிங்கை நடத்தி வருகிறார்.
Recommended Video

சூர்யா தயாரிப்பு
இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு மதுரை, தேனியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் சூட்டிங் ஜரூராக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் மகள் நாயகி
கார்த்தி இல்லாத காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது படத்தின் சூட்டிங்கில் கார்த்தி பங்கேற்றுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

டிசம்பருக்குள் முடிக்க திட்டம்
மேலும் படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டவர்களும் படத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவரும் நிலையில் வரும் டிசம்பருக்கும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

யுவன்சங்கர் ராஜா இசை
அந்த வகையில் இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் யுவனின் இசையும் அதிதி ஷங்கர் நாயகியாக நடிப்பதும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் சூர்யாவின் தயாரிப்பும் படத்திற்கான ஆர்வத்தை ரசிகர்களிடையே உண்டு பண்ணியுள்ளது.


Click it and Unblock the Notifications











