800 First Look - விஜய் சேதுபதி நடிக்க வேண்டிய படத்தில் இவரா.. ஒருவழியா வெளியானது 800 ஃபர்ஸ்ட் லுக்
சென்னை: 800 First Look (800 ஃபர்ஸ்ட் லுக்) முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்புகளால் படத்திலிருந்து அவர் விலகினார். இப்போது வேறு ஒரு நடிகரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
பல கஷ்டங்களை சந்தித்து இப்போது உச்ச நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் நடிப்புக்கு தீனி போடும் எந்த கேரக்டராக இருந்தாலும் நடிப்பதற்கு தயங்காதவர் என பெயர் எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அப்படி அவர் நடித்த பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹிந்தியில் விஜய் சேதுபதி: தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் நுழைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ் வெளியாகி ஹிட்டானது. அதுமட்டுமின்றி, ஷாருக்கானுடன் ஜவான், காத்ரினா கைஃபுடன் ஒரு படம் என ஹிந்தியிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். குறிப்பாக ஹிந்தியை முறையாக கற்றுக்கொண்டு தனது சொந்தக் குரலிலேயே டப்பிங்கும் கொடுக்கிறார்.
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு: இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு 800 என்று பெயரிடப்பட்டு, படத்தை ஸ்ரீபதி என்கிற புதுமுக இயக்குநர் இயக்குவார் எனவும் அதில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பார் எனவும் சில வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
வெளியான மோஷன் போஸ்டர்; எழுந்த எதிர்ப்பு: அதுதொடர்பான மோஷன் போஸ்டரும் வெளியானது. ஆனால் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் சிங்களவர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பவர். எனவே தமிழரான விஜய் சேதுபதி அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்கக்கூடாது என பலர் எதிர்ப்பு தெரிவித்து வலியுறுத்தினர். ஒருகட்டத்தில், படத்திலிருந்து விலகிவிடுங்கள் என முத்தையா முரளிதரனே ஓபனாக கூறினார். இதனையடுத்து விஜய் சேதுபதியும் அதிலிருந்து விலகிவிட்டார்.
800 ஃபர்ஸ்ட் லுக்: இந்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மாதுர் மிட்டல் எனும் பாலிவுட் நடிகர் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவர் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகிமா நம்பியார் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியானது மோஷன் போஸ்டர்: படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதுபோல் ஸ்ரீபதியே படத்தை இயக்குகிறார். இந்தச் சூழலில் முத்தையா முரளிதரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி 800 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனை இசையமைப்பாளர் ஜிப்ரானும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











