Muthu - ரஜினி ரசிகர்களுக்கு செம நியூஸ்.. ரீ ரிலீஸாகும் முத்து.. செம கொண்டாட்டம்தான்

சென்னை: Muthu Re Release (முத்து ரீ ரிலீஸ்) ரஜினிகாந்த்தின் முத்து திரைப்படம் ரீ ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு நிம்மதி கிடைத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படம் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

Muthu Movie Re Release at soon says kavithalaya Company

அடுத்த படம்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஜெய்பீம் இயக்கு த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். சில மாதங்களுக்கு முன்பு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு ஷூட்டிங்கும் தொடங்கியது. முதல் ஷெட்யூல் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. திருவனந்தபுரம் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், இந்தப் படம் கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக பிரமாண்டமாக வெளியாகும் என்று கூறியிருந்தார்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் வழக்கம்போல இசையமைக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் அமிதாப் பச்சனும், முதன்முறையாக ஃபகத் பாசிலும் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது.

முத்து: ரஜினிகாந்த் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஜெயிலர் கொடுத்த வெற்றியை அடுத்தடுத்து அவர் தக்கவைத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ரஜினிகாந்த்தின் கரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்றால் அது முத்து. அந்தப் படத்தில் ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரீமேக்: கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான முத்து திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தென்மாவின் கொம்பத் என்ற மலையாள படத்தின் ரீமேக்காக அது இருந்தாலும் ரஜினியின் தனித்துவமான நடிப்பு கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என படத்தில் பல விஷயங்கள் ஹைலைட்டாக இருந்தன. தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஜப்பானிலும் இந்தப் படம் ரஜினிக்கு ரசிகர்களை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

ரீ ரிலீஸ்: இந்நிலையில் முத்து திரைபடம் ரீ ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பை படத்தை தயாரித்திருந்த கவிதாலயா நிறுவனம் நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்ற கேப்ஷனோடு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X