இத்தனை வருஷம் ஆனாலும் ஜப்பானில் 'முத்து'வோட மவுசு குறையல... மீண்டும் ரிலீஸ்... ரஜினி மகிழ்ச்சி!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படம் மீண்டும் ஜப்பானில் ரிலீசாகிறது.

சென்னை: ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பான் நாட்டில் மீண்டும் ரிலீசாகிறது.

ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1995-ம் ஆண்டு வெளியான படம் முத்து. பெரும் வெற்றி பெற்ற இந்த படம் ஜப்பானிலும் ரிலீசானது. அங்கும் பெரும் வெற்றி பெற்ற முத்து திரைப்படம், ரஜினிக்கு ஜப்பானிய ரசிகர்களை அதிகரித்தது.

Muthu re-releases in Japan

இந்தியாவுக்கு சுற்றுலா வரும் ஜப்பானியர்கள், சென்னைக்கு வந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு முத்து திரைப்படம் அங்கு வெற்றி பெற்றது. இதன் காரணமாக ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ரஜினிக்கு ரசிகர் மன்றம் ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் வரும் 23-ம் தேதி முத்து டான்சிங் மஹாராஜா என்ற பெயரில் ஜப்பானில் மீண்டும் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் 4கே தொழில்நுட்பத்தில் திரைக்கு வருகிறது.

இதற்காக ரஜினிகாந்த் புரொமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் முத்து திரைப்படம் மீண்டும் வெளியாவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், ரசிகர்கள் படத்தைப் பார்த்து வரவேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X