Muthu Teaser: மிரட்டலாக வெளியான முத்து டீசர்... சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு Hi-Fi ட்ரீட் ரெடி!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம், ஜப்பான் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்தப் படம் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், முத்து டீசர் தற்போது ரிலீஸாகியுள்ளது.

வெளியானது முத்து டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினி, கேஎஸ் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் காம்போ முதன்முதலில் இணைந்த திரைப்படம் முத்து. 1995ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. கவிதாலயா தயாரிப்பில் ரஜினியுடன் மீனா, சரத்பாபு, செந்தில், ராதாரவி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
1995ம் ஆண்டு வெளியான முத்து திரைப்படம், 1998ல் ஜப்பான் நாட்டிலும் ரிலீஸானது. தமிழ்நாட்டை விட ஜப்பானிலும் ரஜினியின் ரசிகர்கள் முத்து படத்தை கொண்டாடித் தீர்த்தனர். அதுமட்டும் இல்லாமல் தில்லானா தில்லானா பாடலுக்கு ரஜினி ஆடிய ஆட்டத்தை பார்த்து, அவருக்கு டான்ஸிங் மகாராஜா என டைட்டில் கொடுத்தனர் ஜப்பான் ரசிகர்கள். ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் ரஜினி ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முத்து திரைப்படம் ஜப்பானில் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. இதனையடுத்து இந்தப் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி முத்து வரும் 8ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. 4கே டெக்னாலஜியில் 5.1 சவுண்ட் சிஸ்டத்தோடு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து முத்து படத்தின் ரீ-ரிலீஸ் ப்ரொமோஷன் சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற கேஎஸ் ரவிக்குமார் முத்து உருவான விதம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்திருந்தார். அதனைத் தொடர்ந்து முத்து படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டது. ரஜினி ரசிகர்களுக்கு மாஸ் ட்ரீட்டாக இந்த டீசர் அமைந்துள்ளது.
டிசம்பர் 12ம் தேதி ரஜினியின் பிறந்தநாள் என்பதால், அதனை முன்னிட்டு முத்து திரைப்படம் ரீ-ரிலீஸாகவுள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு பாபா திரைப்படம் ரீ-ரிலீஸாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











