BB8: பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன் எடுத்த இரண்டு சபதங்கள்.. ஃபைனலிஸ்ட் முத்துக்குமரன் பளீச்!

சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி வாரத்தினை எட்டிவிட்டது. போட்டியாளர்கள் சௌந்தர்யா, ரயான், விஷால், முத்துக்குமரன், பவித்ரா ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக உள்ளார்கள். போட்டியாளர் ஜாக்குலின் பணப்பெட்டியை எடுக்கும் டாஸ்க்கில் தோல்வியுற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதற்கு முன்னர், போட்டியாளர் முத்துக்குமரன், வீட்டிற்குள் சென்ற மாகபா ஆனந்திடம் பேட்டி அளித்தார். அப்போது பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் தான் எடுத்த இரண்டு சபதங்கள் குறித்து கூறியுள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

அதில் அவர் பேசுகையில்," மிகப்பெரிய மேடைகள்தான் எந்த ஒரு கலைஞனையும் பண்படுத்தும் பக்குவப்படுத்தும், என்னைப் பண்படுத்திக் கொள்ளவும், பக்குவப் படுத்திக் கொள்ளவும், பிரபலப்படுத்திக் கொள்ளவும் எனக்கு இந்த மேடை தேவை. அதனால்தான் நான் பிக் பாஸில் கலந்து கொண்டுள்ளேன். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை. அதிலும் குறிப்பாக படத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.

bigg boss tamil muthukumaran bb8 8

முத்துக்குமரன்: பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த முறைதான் பேச்சாளர்களுக்கு போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் போட்டியில் இருந்து வெளியேறி எனக்கு பதிலாக இன்னொருவர் வருகின்றார் என்றால், அந்த வாய்ப்பினை நான் மஞ்சரிக்கு வழங்குவேன். பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக பேச்சாளர்கள் இருக்கும்போது, மக்களுக்கு பொழுதுபோக்கான விஷயங்களையும் கடந்து, சமூகத்திற்கு தேவையானவற்றைப் பேசமுடியும். அந்த வேலையை மஞ்சரி சிறப்பாகவே செய்வார். அதனால் நான் அவரைத் தேர்வு செய்வேன்.

bigg boss tamil muthukumaran bb8 8

சபதம் 1: நான் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் இரண்டு சபதங்களை எடுத்துக் கொண்டேன். இந்த வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் நான் அது குறித்துதான் அதிகம் யோசித்துள்ளேன். அதாவது, நான் உங்களை ரொம்பவும் நம்பிவிட்டேன். ஆனால் எதோ ஒரு சூழலில் நீங்கள் எனக்கு எதிராக எதாவது செய்துவிட்டால் என்னால் அதனை பொறுத்துக் கொள்ளவே முடியாது. நான் சுக்கு நூறாக உடைந்து விடுவேன். எனவே இந்த வீட்டிற்குள் வரும்போது மிகவும் உறுதியாக இருந்தது, யாரிடமும் நட்பு ரீதியாக பழக கூடாது, யாரிடமும் நெருக்கமாக இருக்கக் கூடாது.

bigg boss tamil muthukumaran bb8 8

சபதம் 2: அதேபோல் மற்றொரு விஷயம், எல்லோரும் அடிபட்டுத்தான் மேலே வருகின்றோம். என்னை உங்களால் உடைத்துவிட முடியாது. எந்த ஒரு தருணமுமே என்னை உடைத்துவிடாது. செருப்பைக் கழட்டி அடித்தாலும் சிரித்துக் கொண்டே நான் எழுந்து நிற்பேன். என்னை நானே உடைத்துக் கொண்டேன் என்றால் என்னால் அதில் இருந்து மீளவே முடியாது. இந்த வீட்டிற்குள் வருவதற்கு முன்னர் அதிகம் யோசித்தது, ஒரு இடத்தில் கூட நான் உடைந்துவிடக் கூடாது என யோசித்துள்ளேன். இதுவரை அப்படியொரு தருணம் வரவில்லை" என பேசியுள்ளார். முத்துக்குமரனின் இந்த இரண்டு சபதங்களும்தான் அவரை இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக மாற்றியுள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

bigg boss tamil muthukumaran bb8 8

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X