Bigg Boss Tamil 8: பிக் பாஸ் தமிழ் 8 டைட்டில் வின்னர் இவர்தான்.. அப்போ அந்த 2 பேருக்கு பல்பு தானா?
சென்னை: 83 நாட்களை கடந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்னும் சில வாரங்களில் நிறைவடைய உள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்த உடனே பிக் பாஸ் நிகழ்ச்சியும் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல தடைகளையும் ட்ரோல்களை கடந்தும் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக 5 பேர் வந்த நிலையில், கடைசி வரை அவர்கள் நீடித்து வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வாரம் டபுள் எவிக்ஷனாக ஜெஃப்ரி மற்றும் அன்ஷிதா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த சீசன் டைட்டில் வின்னரே இவர்தான் என்கிற தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.
சவுந்தர்யாவுக்கு சான்ஸ் இல்லை: பிக் பாஸ் தமிழ் 8 நிகழ்ச்சியில் டைட்டிலை சவுந்தர்யா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவரது இமேஜ் அதிகம் டேமேஜ் ஆகி வருவதால் மக்கள் மத்தியிலும் அவருக்கு செல்வாக்கு அதிரடியாக குறைந்துவிட்டதாக தகவல்க வெளியாகி உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி மேடை வரை அவர் ஏறுவார் என்றும் ரன்னர் அப்பாக வர நிறைய வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
அருணுக்கு அல்வா தான்: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா உள்ளே வந்து மேலும், அருணுக்கு பூஸ்ட் ஏற்றிவிட்டு சென்றாலும், வெளியே மிகப்பெரிய பிஆர் வேலைகள் நடைபெற்று வந்தாலும் அருணுக்கு இந்த சீசனை வெல்ல வாய்ப்பே இல்லை என்கின்றனர். அதே போல விஜய் டிவியின் செல்ல தொகுப்பாளினியான ஜாக்குலினை இத்தனை நாட்கள் வைத்திருப்பதே பெரிய விஷயம் என்றும் அவர் அடுத்த வாரம் அல்லது கடைசி வாரத்தில் வெளியேறிவிடுவார் என்கின்றனர். மஞ்சரிக்கும் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல வாய்ப்புகள் குறைவுதான் என்கின்றனர்.
இவர் தான் டைட்டில் வின்னர்: இந்த சீசனை பொறுத்தவரை முத்துக்குமரன் தான் பிக் பாஸ் தமிழ் 8ன் டைட்டில் வின்னர் என தகவல்கள் கசிந்துள்ளன. சோஷியல் மீடியாவில் தொடர்ந்து அவருக்கு பெருகி வரும் ஆதரவு மற்றும் முத்துக்குமரன் விளையாடி வரும் விதம் எல்லாம் அவருக்கு நிச்சயம் இந்த சீசனின் டைட்டிலை பெற்றுத் தரும் என்றும் அவர் தான் டைட்டில் வின்னர் என ஃபைனலே செய்துவிட்டதாகவும் தகவல்கள் லீக் ஆகியுள்ளன. என்ன ஆகப் போகிறது என்பதை இன்னும் 3 வாரங்கள் முடிவில் தெரிந்துக் கொள்வோம்.


Click it and Unblock the Notifications











