»   »  நடிக்க தயார்-ஆனால்..: முத்துலட்சுமி!

நடிக்க தயார்-ஆனால்..: முத்துலட்சுமி!

Subscribe to Oneindia Tamil

வீரப்பன் தொடர்பான படத்தில் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் அந்தப் படத்தை முன்னணிஇயக்குநர்கள் யாராவது எடுக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பேன், அந்தப் படத்தை எடுப்பதற்கும்அனுமதிப்பேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற இயக்குநர் வீரப்பனின் கதையை படமாக்கப் போவதாகவும் அதில்முத்துலட்சுமியும் நடிக்க உள்ளதாகவும் அறிவித்தார். ஆனால் இதை மறுத்த முத்துலட்சுமி, ரமேஷ் அந்தப்படத்தை எடுக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் கோபமாக கூறினார்.

இந்த நிலையில் வீரப்பன் கதையை யாராவது முன்னணி இயக்குநர்கள் எடுத்தால் நடிக்கத் தயார் என்றுகூறியுள்ளார் முத்துலட்சுமி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனிடம் பலமுறை நான்கொலைகளை செய்யாதீர்கள். மனித உயிர்களைப் பறிப்பது பாவச் செயல் என்று கூறியுள்ளேன். ஆனால்அவரை அந்தச் சூழ்நிலைக்கு தள்ளியவர்களையும் நான் சிந்தித்து பார்க்கிறேன்.

வீரப்பன் இன்று உயிரோடு இருந்திருந்தால் உண்மையை மக்களிடம் விளக்கியிருப்பார். அவரது பெயரும்களங்கப்பட்டிருக்காது.

என்னிடம் வீரப்பன் நிறைய பணம் தந்திருப்பதாகத்தான் மக்கள் நினைப்பார்கள். அதில் தப்பே கிடையாது.உண்மையில், எனது அக்கா கொடுக்கும் பணத்தில்தான் குடும்ப வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. எனதுகுழந்தைகளின் படிப்புச் செலவுக்கு மட்டும்தான் வீரப்பனிடமிருந்து நான் பணம் பெற்றேன்.

எனது குழந்தைகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெல்ல வேண்டும், பதவிக்கு வர வேண்டும். அதன் பின்னர்அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்றார் முத்துலட்சுமி.

வீரப்பன் பற்றி படம் தயாராவதாகவும், அதில் நீங்கள் நடிக்கப் போவதாகவும் தகவ்ல வெளியானதே?

வீரப்பன் பற்றி யாரும் கற்பனையாகத் தான் படம் எடுக்க முடியும். அவர் பொதுமன்னிப்பு கோரிய போதுதன்னைப் பற்றி வேறு யாரும் சினிமா எடுக்க கூடாது. தானே தயாரித்து கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும்கூறியிருந்தார். அதில் என்னை கதாநாயகியாக நடிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அப்ப நீங்க நடிக்கலாமே?

வீரப்பன் கதை சாதாரணக் கதை அல்ல. மகாபாரதத்தை விட பெரிய கதை. நிஜக் கதையை என்னனால் தான்சொல்ல முடியும். இதுவரை நான் அந்த விஷயங்களை வெளியிடவில்லை.

அவர் கதையை ஒரு படம் அல்ல, 3 அல்லது 4 படங்களே எடுக்கலாம். நல்ல இயக்குநர், தயாரிப்பாளர்கிடைத்தால் கதை சொல்ல தயாராக இருக்கிறேன்.

டைட்டில் காட்சியில் 5 நிமிடம் நான் பேசுவது மாதிரி நடிக்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி என் கணவர்கதாநாயகனாக இல்லாதபட்சத்தில் நான் நாயகியாக நடிக்க தயாராக இல்லை.

தற்போது மலைவாழ் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறேன். விரைவில் பெண்களுக்கான புதிய இயக்கம்தொடங்கி அவருக்களுக்காக பாடுபடுவேன். வீரப்பன் பெயரில் உள்ள களங்கத்தை துடைப்பேன்.

பொதுமக்களை பொறுத்தவரை வீரப்பன் நல்லவர் தான். என்னை வீரப்பன் மனைவியா என்று அதியமாகப்பார்க்கிறார்கள். நான் போலீசுக்கு பயப்படாத பெண் என்பதால் நிறைய பேர் புகார் மனுக்கள் தருகின்றனர்.

அரசாங்கத்திடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்.?

வன உரிமை மசோதா சட்டத்தை கொண்டு வந்து ஆதிவாசி மக்களை நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ வகைசெய்ய வேண்டும்.

வீரப்பன் கதையை புத்தகமாக எழுதுகிறீர்களாமே?

ஆமாம். முக்கால்வாசி முடிந்து விட்டது. விரைவில் புத்தகம் வெளிவரும். பல பரபரப்பு தகவல்களும் அதில்இடம் பெற்றிருக்கும் என்றார் முத்துலட்சுமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil