வீரப்பன் படம்... பார்க்க மறுக்கும் முத்துலட்சுமி!

By Shankar

Muthulakshmi refuses to watch Vanayudham
சந்தனக்காட்டு வீரப்பன் குறித்து எடுக்கப்பட்டுள்ள படமான வனயுத்தத்தை பார்க்க மறுத்துவிட்டார் அவர் மனைவி முத்துலட்சுமி.

போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனின் கதையை வனயுத்தம் என தமிழிலிலும், அட்டஹாசா என கன்னடத்திலும் படமாக்கியுள்ளனர்.

இதில் வீரப்பன் வேடத்தில் கிஷோர், வீரப்பனை வேட்டையாடும் போலீஸ் அதிகாரியாக அர்ஜுன், வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் விஜயலட்சுமி, வீரப்பன் தந்தையாக யோகி தேவராஜ் நடித்துள்ளனர். மற்றும் லட்சுமிராய், சிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரத் தயாக உள்ளது.

இந்த நிலையில் 'வனயுத்தம்' படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். படத்தில் தனது பாத்திரத்தை தவறாக சித்தரித்து உள்ளதாகவும் இதன் மூலம் தன் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, படத்தை முத்துலட்சுமிக்கு போட்டுக் காட்ட வேண்டும் என இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி முத்துலட்சுமிக்கு படத்தைத் திரையிட்டு காட்ட இயக்குனர் முன் வந்தார். ஆனால் அவர் படம் பார்க்க மறுத்துவிட்டாராம்.

இதுகுறித்து இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கூறுகையில், "நீதிமன்ற உத்தரவுபடி 'வனயுத்தம்' படத்தை முத்துலட்சுமிக்கு திரையிட்டு காட்ட இரண்டு நாட்கள் தயாராக இருந்தேன். அவர் படம் பார்க்க வரவில்லை. படத்தால் குழந்தைகள் நலன் பாதிக்கும் என்கிறார். வீரப்பனை வில்லனாக சித்தரித்து இருப்பதாகவும் கூறி வருகிறார். படத்தை பார்த்து விட்டு சொல்லுங்கள் என்றால் வர மறுக்கிறார்.

நடந்த சம்பவங்களைத்தான் படத்தில் வைத்துள்ளேன். யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இல்லை," என்றார்.

இந்தப் படத்தின் திரைக்கதையை வீரப்பனைச் சுட்டுக் கொன்ற காவல் துறை அதிகாரி விஜயகுமாருக்கு காட்டிவிட்டுத்தான் இயக்குநர் ரமேஷ் படமாக்கினார் என்று கூறப்படுகிறது. வீரப்பனை ஹீரோவாகக் காட்ட போலீஸ் அதிகாரிகள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்... முடிந்தவரை கேவலமாகத்தானே காட்டியிருக்கப் போகிறார்கள்? என்பது முத்துலட்சுமியின் வாதம்.

நியாயம்தானே!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X