Pongal Real Winner: இந்த பொங்கலுக்கு தியேட்டர்களை காப்பாற்றியது இந்த படம் தான்.. தியேட்டர் ஓனர் ஓபன் டாக்!

சென்னை: இந்த பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் வெளியாகாத நிலையில், உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர். தியேட்டர் ஓனர்களும் ஜன நாயகன் படத்தை வெளியிட முடியாத சூழலில் இந்த பொங்கல் அவ்வளவுதான் என நினைத்த நிலையில், ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் தான் காப்பாற்றியதாக பிரபல தியேட்டர் ஓனர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் போனா என்னங்க அடுத்து அடுத்து நடிகர்கள் வந்து அந்த இடத்தை நிரப்புவாங்க என திருப்பூர் சுப்ரமணியம் எல்லாம் பேசி வந்த நிலையில், இந்த பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கு பெரிய சப்போர்ட்டும் செய்தார்.

Muthuram Multiplex theater owner says Jiiva s TTT is the real Pongal Winner
Photo Credit:

ஆனால், அவர் நினைத்தது போல அந்த படம் பொங்கல் வசூலை வேட்டையாட முடியாமல் திணறிவிட்டது. திடீரென தியேட்டர்கள் எல்லாம் டல் அடிக்க ஆரம்பித்த நிலையில், போகிக்கு வந்த கார்த்தியின் வா வாத்தியார் படமும் ரசிகர்களை அப்செட் ஆக்க, கடைசியாத்தான் வந்தார் விநாயக் மாதிரி ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கல் வார விடுமுறையை தியேட்டர்களுக்குச் சென்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மாற்றியது.

ஜன நாயகனுக்கு வரவேண்டிய கிரவுட்: விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு என்ன கிரவுட் வரணுமோ அதுபோன்ற ஒரு கூட்டத்தை ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கல் விடுமுறையான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்களில் கொண்டு வந்து அரங்குகளை நிறைத்து விட்டதாக திருநெல்வேலி முத்துராம் மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஓனர் வெளிப்படையாக வீடியோ வெளியிட்டு ஜீவாவுக்கும் படக்குழுவுக்கும் அந்த படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

TTT பொங்கல்: இந்த பொங்கல் தளபதி பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பஞ்சாயத்துக் காரணமாக இன்னமும் அந்த படம் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியான நிலையில், பராசக்தி பொங்கல் என கொண்டாட ஆரம்பித்த நிலையில், பராசக்தி பாக்ஸ் ஆபீஸில் பெரிய ஏமாற்றத்தை சந்தித்த நிலையில், இந்த பொங்கலின் ரியல் வின்னர் தலைவர் தம்பி தலைமையில் தான் என்றும் TTT பொங்கல் தான் இது என முத்துராம் தியேட்டர் ஓனர் வீடியோ வெளியிட்டுள்ளார். நிறைய தியேட்டர் ஓனர்களையும் காப்பாற்றியது இந்த படம் தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X