விஜய் சேதுபதிக்கு 2 விஷயங்களை கற்றுக் கொடுத்த ஆசான் முத்துசாமி

By Siva

Recommended Video

கலைஞர்களின் பிதாமகன்.. கூத்துப்பட்டறை ந. முத்துச்சாமி மறைந்தார்!- வீடியோ

சென்னை: கூத்துப் பட்டறை ஆட்கள் என்றாலே நிச்சயம் நன்றாக நடிப்பார்கள் என்று தமிழ் திரையுலக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

கூத்துப்பட்டறை துவங்கி பலருக்கும் நடிக்க கற்றுக் கொடுத்த ந. முத்துசாமி உடல் நலக்குறைவால் இன்று காலை 11.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவரின் மறைவு கூத்துப்பட்டறையின் வரலாற்றில் ஈடு, இணை செய்ய முடியாத பேரிழப்பாகும்.

சினிமா படங்களில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்த பலருக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்தவர் முத்துசாமி.

கூத்துப் பட்டறை

கூத்துப் பட்டறை

கூத்துப் பட்டறையில் பயின்றவர்கள் என்றாலே கோலிவுட்டில் ஒரு கவுரவம் உள்ளது. அந்த கவுரவத்திற்கு சொந்தக்காரர் ந. முத்துசாமி. அவர் பட்டறையில் இருந்து வெளியே வந்தவர்கள் வாழ்க்கையில் போராடினாலும் நிச்சயம் வெற்றி அடைகிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் நம் விஜய் சேதுபதி தான்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் கோலிவுட்டின் நம்பிக்கை நடிகர்களில் ஒருவர். அவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது கூத்துப் பட்டறையில் இருந்தவர் விஜய் சேதுபதி. நடிக்க வந்த உடனே விஜய் சேதுபதியால் உச்சத்தை தொட முடியவில்லை. கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களை பயன்படுத்தி நல்ல வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்து வெற்றி பெற்றுள்ளார்.

முத்துசாமி

ந. முத்துசாமியின் மாணவரான விஜய் சேதுபதி தான் கோலிவுட்டின் பிசியான ஹீரோ ஆவார். அவரின் படங்கள் தான் அடுத்தடுத்து ரிலீஸாகி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதியின் மெச்சூரான நடிப்புக்கு முத்துசாமி தான் காரணம். விஜய் தேதுபதி இன்று தனது ஆசானை இழந்து வாடுகிறார். கூத்துப் பட்டறையில் இருந்து வந்தவர்களிடம் தன்னடக்கம் அதிகம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வார்

வாழ்வார்

விமல், விதார்த், பசுபதி, விஜய் சேதுபதி என்று கூத்துப் பட்டறையில் இருந்து வந்த அனைவரின் நடிப்பிலும் முத்துசாமி தொடர்ந்து வாழ்வார். அவரின் உடலுக்கு மட்டும் தான் அழிவே தவிர அவரின் கலைக்கு அல்ல. அவர் நடிப்பு குரு மட்டும் அல்ல நீர்மை உள்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். அவர் வாழ்த்துக்கள் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X