முத்தையா முரளிதரன் பயோபிக்.. விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் தனுஷ் பட ஹீரோயின்.. யார் தெரியுமா?

சென்னை: பல எதிர்ப்புகளையும் மீறி, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக தனுஷ் பட நாயகி ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ்டர், லாபம், யாவரும் கேளிர், மாமனிதன், துக்ளக் தர்பார், இடம் பொருள் ஏவல் என விஜய்சேதுபதி நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், அடுத்த பட வேலைகளை விஜய்சேதுபதி ஆரம்பித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் படங்கள்

ஸ்போர்ட்ஸ் படங்கள்

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் வெளியான கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், ஸ்போர்ட்ஸ் பிரபலங்களின் பயோபிக் படங்களுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட மவுசு உருவாகி இருக்கிறது. 1983ம் ஆண்டு முதன் முதலாக இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியதை மையமாக வைத்து ‘83' என்ற படம் உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு, கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து விஜய்யின் பிகில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரன்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலை சிறந்த சுழற் பந்துவீச்சாளராக இருந்த முத்தையா முரளிதரன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காவும் தோனியின் தலைமையில் விளையாடி உள்ளார். தற்போது இலங்கை அணியின் கோச்சாக இருக்கும் அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். அதில், முத்தையா முரளிதரனாக விஜய்சேதுபதி நடிக்க உள்ளார்.

ராஜபக்சே அடிமை

ராஜபக்சே அடிமை

ஈழத் தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்கும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால், பல எதிர்ப்புகளையும் மீறி முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்க விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

சொந்த வாழ்க்கை

இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை விட, சொந்த வாழ்க்கையை மையப்படுத்தி திரைக்கதை இருக்கும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். ‘800' என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜிஷா விஜயன்

ரஜிஷா விஜயன்

இந்நிலையில், சமீபத்திய தகவல் என்னவென்றால், இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க, நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் நாயகி ரஜிஷா விஜயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மலையாளத்தில் பிசியாக இருக்கும் இவர், தமிழில் கர்ணன் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X