800 Trailer - தமிழனும் இல்லை சிங்களனும் இல்லை கிரிக்கெட்டர்.. சச்சின் வெளியிட்ட 800 ட்ரெய்லர்

சென்னை: 800 Trailer (800 ட்ரெய்லர்) முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாறான 800 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை திரைப்படமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்துக்கு 800 என்று பெயரிடப்பட்டு, படத்தை ஸ்ரீபதி என்கிற புதுமுக இயக்குநர் இயக்குவார் எனவும் அதில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிப்பார் எனவும் சில வருடங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.

Muttiah Muralitharans Biopic 800 Movie Trailer Released by Sachin Tendulkar

எழுந்த எதிர்ப்பு: அதுதொடர்பான மோஷன் போஸ்டரும் வெளியானது. ஆனால் முத்தையா முரளிதரன் தமிழராக இருந்தாலும் சிங்களவர்களுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவர். எனவே தமிழரான விஜய் சேதுபதி அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்கக்கூடாது என பலரும் வலியுறுத்தினர். ஒருகட்டத்தில், படத்திலிருந்து விலகிவிடுங்கள் என முத்தையா முரளிதரனே ஓபனாக விஜய் சேதுபதியிடம் கூறினார். இதனையடுத்து விஜய் சேதுபதியும் 800லிருந்து விலகிவிட்டார்.

ஃபர்ஸ்ட் லுக்: இதனையடுத்து 800 படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக மாதுர் மிட்டல் எனும் பாலிவுட் நடிகர் நடிக்க கமிட்டானார். இவர் ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகிமா நம்பியார், வேல ராமமூர்த்தி, நரேன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

மோஷன் போஸ்டர்: படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். படத்தின் மோஷன் போஸ்டர் முத்தையா முரளிதரனின் பிறந்தநாளை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வெகுவாகவே வரவேற்பை கொடுத்தனர். மேலும் படத்தின் டீசரும், ட்ரெய்லரும் எப்போதும் வெளியாகும் என்ற ஆவலும் ரசிகர்களிடையே இருந்தது.

வெளியானது ட்ரெய்லர்: இந்நிலையில் 800 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லரை இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முரளிதரன், ஜெயசூர்யா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். முரளிதரன் கிரிக்கெட்டுக்குள் நுழைந்ததிலிருந்து, அவர் பந்தை எறிகிறார் என்ற சர்ச்சைவரை முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் ஒன்று விடாமல் இந்தப் படத்தில் காட்டப்பட்டிருப்பது ட்ரெய்லரில் தெரிகிறது.

மேலும் நரேன் விடுதலைப் புலிகள் கேரக்டரை ஏற்றிருக்கிறார். குறிப்பாக நான் தமிழனும் இல்லை சிங்களனும் இல்லை கிரிக்கெட்டர் என்று முத்தையா முரளிதரன் பேசுவது போன்ற வசனம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X