RB Choudary: ஆர்.பி. சவுத்ரியின் அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.. ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை: சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளரும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி. சவுத்ரி இன்று ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு என நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கலக்குவதற்கு முன்பாகவே 1983ம் ஆண்டு ரஜினிகாந்தின் 'அடுத்த வாரிசு' படத்தை ஓவர்சீஸில் விநியோகம் பண்ணவர் தான் ஆர்.பி. சவுத்ரி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. சவுத்ரிக்கும் பல வருட நட்பு இருந்த வந்த நிலையில், அவரது அகால மரணச் செய்தி தனக்கு பேரதிர்ச்சியாக மாறியுள்ளது என ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் இரங்கல்: "என் அருமை நண்பர் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் ஆர்.பி. செளத்ரி அவர்கள் தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர்.
அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்" என ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள்: நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஜீவா உள்ளிட்டவர்களுக்கு சினிமா பிரபலங்கள் தங்கள் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையான தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி 34க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்கிற பெருமைக்குரியவர். கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன் போன்ற தலை சிறந்த இயக்குநர்கள் எல்லாம் ஆர்.பி. சவுத்ரி கொடுத்த வாய்ப்பால் தான் தமிழ் சினிமாவுக்கு ஃபீல் குட் படங்களை கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications