பொள்ளாச்சி கொடூரத்தை பார்த்து என் ரத்தம் கொதிக்குது: குஷ்பு

By Siva

Recommended Video

நீதி கிடைக்குமா!!!.. பொள்ளாச்சி வீடியோவை பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது- திரைபிரபிலங்கள்

சென்னை: பொள்ளாச்சி சம்பவம் குறித்து அறிந்து தனது ரத்தம் கொதிப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் 200 அப்பாவி பெண்களை மிரட்டில் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளது 20 பேர் கொண்ட கும்பல். அந்த கும்பலில் வெறும் 4 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களையும் விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

குஷ்பு

பொள்ளாச்சி கொடூரன்களை வெறிநாய்களிடம் விட வேண்டும். இந்த கொடூரத்தை செய்த யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது. ரத்தம் கொதிக்கிறது. அந்த மிருகங்களுக்கு கருணையே காட்டக் கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பவர்களுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்று நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

மகள்கள்

மகள்கள்

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு தைரியமாக பொள்ளாச்சி விவகாரம் பற்றி பேசியுள்ளார். இரண்டு பெண்களை பெற்ற அவருக்கு இந்த கொடூரத்தை பார்த்து கொந்தளிக்காமல் இருக்க முடியவில்லை.

கோரிக்கை

அப்பாவி பெண்களை சீரழித்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார்.

போராட்டம்

பொள்ளாச்சி சம்பவம் பற்றி தெரிந்தும் பலர் கண்டும் காணாதது போன்று உள்ளது வியப்பு அளிக்கிறது. இந்நிலையில் திரையுலகினர் இந்த கொடூரத்தை எதிர்த்து போராடினால் நிச்சயம் அனைவரின் கவனமும் திரும்பும். இது நடக்குமா என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X