Just In
- 3 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 4 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 6 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 8 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
திருவண்ணாமலை திருவூடல் திருவிழா: நந்திக்கு தரிசனம் தந்த அண்ணாமலையார் - சூரியனுக்கும் காட்சி
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Lifestyle
கோதுமை ரவை பாயாசம்
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மை பாஸி குமாரு இஸ் பேக்.. கடவுள் இருக்கான் குமாரு.. அர்ச்சனா மம்மியுடன் மகள் சாரா.. க்யூட் செல்ஃபி!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் அவரது மகள் சாரா எடுத்துக் கொண்ட க்யூட் செல்ஃபி வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் தீமை தான் வெல்லும் அதிரடியான பேக்ரவுண்ட் மியூசிக்கில் 11ம் நாளில் உள்ளே நுழைந்த அர்ச்சனா 77வது நாளில் அன்பு தான் வெல்லும் என சொல்லிக் கொண்டே வெளியேறினார்.
இந்த வாரம் அர்ச்சனாவின் எவிக்ஷனை ஆதரித்தும் எதிர்த்தும் ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் டைட்டில் வின்னரும் நடிகருமான ஆரவ்வின் தந்தை காலமானார்.. சோகத்தில் உறைந்த குடும்பம்!

எதிர்பார்க்காத எக்ஸிட்
நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்ட நிலையில், அடுத்த டார்கெட்டாக ஹவுஸ்மேட்கள் அர்ச்னாவை குறிவைத்து நாமினேட் செய்தனர். ஆஜித், ஷிவானி, சோம் எல்லாம் இருக்கும் போது, அர்ச்சனா எப்படி வெளியேறுவார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என கமல் சொன்னது போல எதிர்பார்க்காத எக்ஸிட்டாக அர்ச்சனாவின் வெளியேற்றம் அமைந்துள்ளது.

சாரா ஹேப்பி
அர்ச்சனாவின் வெளியேற்றம் ரியோ, சோமசேகர் மற்றும் கேபியை தவிர அந்த வீட்டில் யாருக்குமே சோகத்தை தரவில்லை என்பது தான் உண்மை. ஆனால், அர்ச்சனாவின் எவிக்ஷனால் ரொம்பவே ஹேப்பியாக இருப்பது அவருடைய அன்பு மகள் சாரா மட்டும் தான். வீட்டுக்குள்ளும் சிலர் வேற மாதிரியான சந்தோஷத்தில் உள்ளனர்.

மகளுடன் செல்ஃபி
கிட்டத்தட்ட 90 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் சாராவும், மகளை இத்தனை நாட்கள் பிரிந்து வாடிய பாசத்தை ஒட்டுமொத்தமாக பிழிந்து தர வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன் இருக்கும் அர்ச்சனாவும் இணைந்து எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாஸி குமாரு இஸ் பேக்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அர்ச்சனா அம்மாவுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்த சாரா, பாஸி குமாரு இஸ் பேக் என்றும், கடவுள் இருக்கான் குமாரு என்றும் சூப்பரான கேப்ஷன் கொடுத்து அர்ச்சனா ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளார். சீக்கிரமே நிஷா மற்றும் ஜித்தனை சந்தித்து ஒரு ரீயூனியன் போட்டோ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடவுள் இருக்கான் குமாரு
ஆரி சேவ் ஆனதும் பாலா, ரம்யா, ஷிவானியிடம் வந்து அர்ச்சனா கடவுள் இருக்கானா குமாரு? என பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் அர்ச்சனாவுக்கு எதிராக போடப்பட்டன. இந்நிலையில், அம்மா சீக்கிரம் வீட்டுக்கு வரணும்னு தான் வேண்டியது நிறைவேறிவிட்டது என்கிற உற்சாகத்தில் கடவுள் இருக்கான் குமாரு என சாரா பதிவிட்டுள்ளது பாராட்டுக்களை அள்ளி வருகிறது.