லண்டனில் சிக்கிய தம்பி.. மன அழுத்தத்தால் பாதிப்பு.. எப்ப திருப்ப முடியுமோ? பிரபல ஹீரோயின் கவலை!

By

சென்னை: கொரோனாக காரணமாக, லண்டனில் சிக்கிக்கொண்ட தம்பியின் உடல் மற்றும் மனநிலை குறித்து பிரபல நடிகை கவலை அடைந்துள்ளார்.

Recommended Video

Video: Malavika Mohanan Bike racing | Master

ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நடிகை மாளவிகா மோகனன்.

பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.

மஜித் மஜிதி

மஜித் மஜிதி

பின்னர் மலையாளத்தில் நிர்மயாகம், த கிரேட் ஃபாதர் ஆகிய படங்களில் நடித்த மாளவிகா மோகனன், கன்னடப் படங்களிலும் நடித்தார். இதையடுத்து புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இந்தியில் இயக்கிய பியான்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார். இதில் இஷான் கட்டார் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டது.

மாஸ்டர் ஹீரோயின்

மாஸ்டர் ஹீரோயின்

இப்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர், லாக்டவுன் காரணமாக, லண்டனில் சிக்கிக்கொண்ட தனது தம்பி, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: என் சகோதரர் ஆதித்யா லண்டனில் படித்து வருகிறார். படிக்கும் கல்லூரிக்கு வெளியே வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். அவருடன் படித்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்கள் தங்கள் நாடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

அதனால் தனியாக இருக்கிறார். கொரோனாவுக்கு லண்டன் கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. அங்கு இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது அவருக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. நிச்சயமற்ற தன்மையால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அறையில் சமையல் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.

உறவினர்கள்

உறவினர்கள்

ரெஸ்டாரன்ட்களில் ஆர்டர் செய்து சாப்பிடுவது பாதுகாப்பானதாக இருக்காது என்பதால், கடந்த ஒரு மாதமாக, டப்பாக்களில் அடைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறார். அங்கு எங்களுக்கு எந்த உறவினர்களும் இல்லை. அதனால் அவரது உடல் மற்றும் மனநிலை குறித்து கவலையாக இருக்கிறது.

இந்திய தூதரகம்

இந்திய தூதரகம்

இந்தப் பிரச்னை எப்போது முடியும் என்றும் தெரியவில்லை. மே 3 ஆம் தேதிக்குப் பிறகாவது அவரால் இந்தியா திரும்ப முடியுமா? என்பதும் தெரியவில்லை. இது தொடர்பாக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு ஆதித்யா பலமுறை மெயில் அனுப்பியும் சரியான சரியான பதில் கிடைக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X