என் அண்ணன் மணிகண்டன் பிக் பாஸ் வீட்டுக்கு போய் ஆள் மாறீட்டான்... ஐஷ்வர்யா ராஜேஷ் கருத்து
சென்னை: வத்திக்குச்சி திரைப்பட இயக்குநர் கின்சிலின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா திரைப்படம் நேற்று வெளியாகவிருந்தது.
ஆனால் வெளி வராத காரணங்களில் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக் குழுவினர் திடீரென்று அறிவித்தனர்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் தனது அண்ணன் மணிகண்டன் பற்றியும் அந்த நிகழ்ச்சியை பற்றியும் பேசியிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அண்ணனை மிரட்டிய ஐஷ்வர்யா
டிரைவர் ஜமுனா படத்தில் 2 நாட்கள் நடித்தாராம் மணிகண்டன். அப்போது தனக்கு கார் ஓட்ட தெரியாது என்று இயக்குநர் முன் கலாய்த்த மணிகண்டனை வேகமாக கார் ஓட்டி பயமுறுத்தினேன். காட்சிப்படி அவன் பயந்து நடிக்க வேண்டும், ஆனால் உண்மையாகவே பயந்துவிட்டான். அந்த ஷாட் எடுத்து முடித்தவுடன் மொக்கையா ஓட்டு வாங்கன்னு சொன்னீங்க, ஆனா நல்லாதான் ஓட்டுறாங்க என்று அந்தக் காட்சியில் எங்களுடன் நடித்த ஆடுகளம் நரேன் கூறியதாக ஐஸ்வர்யா கூறினார்.

பிக் பாஸ் 6
ஐஸ்வர்யாவின் நடிப்பில் உருவாகி பிரி புரொடக்சன், புரொடக்சன், போஸ்ட் புரொடக்சன் என்று வெவ்வேறு நிலைகளில் இருக்கும் படங்கள் மொத்தம் 11. அதில் நிறைய படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையிலும் தனது அண்ணன் மணிகண்டனுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான எப்பிசோடுகளை பார்த்து வருகிறாராம் ஐஸ்வர்யா.

பிக் பாஸ் வீட்டில் விளம்பரம்
ஆனால் தன்னுடைய அம்மா வீட்டில் எப்போது பார்த்தாலும் 24x7 லைவ் டெலிகாஸ்ட் பார்க்கிறார். பைத்தியம் பிடித்து விடப் போகிறது என்று நான் திட்டியும் விட்டேன், இருந்தாலும் மகன் என்ற ஆவலால் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றூ கூறிய ஐஷ்வர்யா சமீபத்தில் நடந்த டிரைவர் ஜமுனா பிரஸ் மீட்டில் பேசும்போது கூட மணிகண்டன் பிக் பாஸ் வீட்டில் இருப்பதினால் அங்கு புரமோஷன் செய்யலாம் என்ற யோசனை வந்ததாக கூறியிருந்தார்.

சீரியஸ் மணிகண்டன்
மணிகண்டன் அந்த வீட்டிற்கு செல்லும் முன்பு தான் எந்த ஆலோசனையும் கூறவில்லையாம். ஆனால் அவனது நண்பர்கள் நிறைய அறிவுரை கூறினார்கள். தன்னை பொறுத்தவரை நல்லதோ கெட்டதோ எது அந்த வீட்டில் நடந்தாலும் பரவாயில்லை. அடிப்படையில் மணிகண்டன் ஒரு ஜாலியான நபர். ஆனால் அந்த வீட்டில் சீரியஸான ஆள் போலவே இருக்கிறான். ஒருவேளை, அந்த வீட்டிற்கு போனால் அந்த மாதிரி மாறிவிடுவார்களோ என்னவோ. எப்போதும் ஒரு விதமான யோசனையோடே மணிகண்டன் இருக்கிறான் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











