'தலைவி' வாழ்க்கைல டர்னிங் பாயின்டே நான்தான்.. இந்த முன்னாள் ஹீரோயின் யார் கேரக்டர்ல நடிக்கிறாங்க?

By

சென்னை: 'தலைவி' வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் கேரக்டரில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார், பிரபல முன்னாள் ஹீரோயின்.

Recommended Video

Thalaivi Massive Loss: குமுறும் தயாரிப்பாளர் | 5 Crores set Damaged

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை, தலைவி என்ற பெயரில் சினிமாவாக்கப்பட்டு வருகிறது.

விஜய் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக, இந்தி நடிகை கங்கனா ரனவத் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமசந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

ஜூன் மாதம் 26 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக பிரபல முன்னாள் ஹீரோயின் பாக்யஶ்ரீ தெரிவித்துள்ளார். இவர் இந்தியில், சல்மான் கானுடன், மைனே பியார் கியா படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

திருப்பம் ஏற்படுவது

திருப்பம் ஏற்படுவது

முதல் படத்திலேயே கவனிக்கப்பட்ட இவர், திருமணத்துக்குப் பிறகு அதிக படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள பாக்யஶ்ரீ, இப்போது பிரபாஸ் 20 படத்திலும் நடித்து வருகிறார். 'தலைவி' படத்தில் நடிப்பது பற்றி கூறும்போது, 'இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறேன். 'தலைவி'யின் வாழ்க்கையில் என்னால்தான் திருப்பம் ஏற்படுவது போன்ற கேரக்டர்.

லாக்டவுன்

லாக்டவுன்

நான் கலந்துகொண்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. மைசூர், சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. ஏப்ரல் மாதம் நான் இந்த படத்தில் நடிப்பது பற்றி அறிவிக்க இருந்தார்கள். அதற்குள் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு விட்டது. கங்கனாவுக்கும் எனக்கும் அதிகமான காட்சிகள் இருக்கின்றன.

வித்தியாசமான லுக்

வித்தியாசமான லுக்

எங்களின் கெமிஸ்ட்ரியை படக்குழு ரசித்தது. இதுவரை பார்த்ததில் இருந்து எனது லுக் வித்தியாசமாக இருக்கும். கங்கனா சிறந்த நடிகை. அவரை கடந்த 2006 ஆம் ஆண்டு முதன்முதலாக சந்தித்தேன். அப்போதுதான் அவர் கேரியரை ஆரம்பித்திருந்தார். இப்போதும் அப்போது கொடுத்த அதே மரியாதையை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X