சிம்பு கூட எனக்கு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகாது.. இது என்னடா காதல் மன்னனுக்கு வந்த சோதனை!

சென்னை : தென்னிந்தியாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து இப்பொழுது உச்ச நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்

சிம்புவுடன் இணைந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துள்ள தமன்னா சிம்புவுடன் தனக்கு கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகவில்லை என கூறியுள்ளார்.

வில்லியாக

வில்லியாக

கேடி படத்தில் வில்லியாக நடித்து தமிழில் அறிமுகமான தமன்னா அதைத் தொடர்ந்து வியாபாரி கல்லூரி உள்ளிட்ட படங்களில் ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தனுஷுடன் இணைந்து நடித்த படிக்காதவன் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது தமிழில் இவருக்கு ரசிகர்களும் கூடினர்.

கார்த்தியுடன் இணைந்து

கார்த்தியுடன் இணைந்து

பப்பாளி பழம் போல தேகம் பார்த்தவுடனேயே பிடித்து விடும் அழகு என க்யூட் ஹீரோயினியாக தமிழில் வலம் வந்த தமன்னாவுக்கு பையா, திரைப்படம் மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான இந்தப் படம் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக வே உள்ளது. இதில் வெறும் கதாநாயகியாக மட்டும் வந்து செல்லாமல் ஒட்டுமொத்த படத்தையும் கார்த்தியுடன் இணைந்து தாங்கியிருப்பார்.

தெலுங்கிலும் மிக பிஸியான

தெலுங்கிலும் மிக பிஸியான

அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், சுரா, தில்லாலங்கடி, சிறுத்தை,வேங்கை,ஸ்கெட்ச்,வீரம், தர்மதுரை என கிட்டத்தட்ட தமிழில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து ஜோடி போட்டு நடித்துள்ள தமன்னா தெலுங்கிலும் மிக பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். அங்கும் பல ஹிட்டுகளை கொடுத்து தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.

சிம்புவுடன் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை

சிம்புவுடன் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை

ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அதே சமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அந்த வகையில் தமன்னா முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்த பெட்ரமாக்ஸ் மற்றும் நவம்பர் ஸ்டோரி உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தைப் பெற்றன. கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் தமிழில் இணைந்து நடித்துள்ள தமன்னாவுக்கு சிம்புவுடன் மட்டும் கெமிஸ்ட்ரி செட் ஆகவில்லை என தெரிவித்துள்ளார்.

Recommended Video

Akila Exclusive | Simbu முதல் Vijayakanth வரை நான்தான் தங்கச்சி | Filmibeat Tamil
கெமிஸ்ட்ரி ஆசை நடக்குமா

கெமிஸ்ட்ரி ஆசை நடக்குமா

சிம்பு மற்றும் தமன்னா இருவரும் இணைந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற திரைப்படத்தில் நடித்து இருப்பார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் வயதான தோற்றத்தில் இருக்கும் சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா நடித்து இருப்பார். வயதான ஒருவரை காதலிக்கும் கதாபாத்திரத்தில் தமன்னா நடித்ததால் அந்த படத்தில் சிம்புவுடன் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை. எனவே மீண்டும் சிம்புவுடன் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என தமன்னா கூறியுள்ளார். தமன்னாவின் இந்த கெமிஸ்ட்ரி ஆசை நடக்குமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X