நான் தான் 'உத்தமி': முறைப்படி அறிவித்த ஜூலி
சென்னை:தனது படத்தின் தலைப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஜூலி.
பிக் பாஸ், ஓடி விளையாடு பாப்பா என்று டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜூலி விமலின் மன்னர் வகையறா படம் மூலம் கோலிவுட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் அவர் ஹீரோயின் ஆகியுள்ளார்.
ஜூலி
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்தின் பெயர் உத்தமி. இந்த படத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதை ஜூலி ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

விரைவில்
உத்தமி குறித்த பிற விபரங்களை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கும் என்று ட்வீட்டியுள்ளார் ஜூலி. படத்தில் ஜூலி சமுக அக்கறை கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.

ஹீரோயின்
உத்தமி படத்தில் ஜூலியின் பெயர் ஜூலியானா. ஆமாம், அவரது நிஜ பெயரில் தான் நடிக்கிறார். ஜூலி ஹீரோயினாகியுள்ளதை பார்த்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கலாய்
ஜூலி ரசிகர்கள், வெறியர்கள் அவரை வாழ்த்தி ட்வீட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரை பிடிக்காதவர்களோ மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











