என் உடை, என் விருப்பம்: ரஹ்மானை விளாசியவர்களுக்கு மகள் நெத்தியடி
சென்னை: மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கண்கள் மட்டுமே தெரியும்படி புர்கா அணிந்தது குறித்து பலரும் தன் தந்தையை விளாசியதை பார்த்த ஏ.ஆர். ரஹ்மானின் மகள் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதை கொண்டாடும் வகையில் மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த நிகழ்ச்சி மேடையில் ஏ. ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா தனது தந்தையை பற்றி பெருமையாகவும், அழகாகவும் பேசினார்.

கதிஜா
கதிஜா தனது தந்தை ரஹ்மானை பற்றி பேசியது பிடித்திருந்தபோதிலும் அவர் கண்கள் மட்டுமே தெரியும்படி முகத்தை மறைத்திருந்ததை பார்த்து பலரும் விமர்சித்தார்கள். ரஹ்மான் இரட்டை வேடம் போடுவதாக அவர் மீது பழி சுமத்தினார்கள்.
விளக்கம்
தான் முகத்தை மறைத்ததால் தனது தந்தை விமர்சிக்கப்படுவதை பார்த்த கதிஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார். நான் என்ன உடை அணிகிறேன் என்பதில் என் பெற்றோர் தலையிடுவது இல்லை. மும்பை நிகழ்ச்சியில் முகத்தை மறைத்தது என் விருப்பம். தனக்கு பிடித்ததை உடுத்த மனிதனுக்கு உரிமை உள்ளது. நான் அதை தான் செய்கிறேன். எதுவும் தெரியாமல் விமர்சிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார் கதிஜா.
ரஹ்மான்
தன்னை பலரும் விமர்சிப்பதை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் தன் வாழ்வின் 3 முக்கிய பெண்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் கதிஜா புர்கா அணிந்துள்ளார்.

மாணவிகள்
கதிஜா எங்கு சென்றாலும் புர்கா அணிய விரும்புபவர். இது அவருடன் படித்த அனைவருக்கும் தெரியும். ரஹ்மான் மகளாக இருந்தாலும் பந்தா இல்லாத பெண், சரியான நேரத்திற்கு தொழுவார், புர்கா இல்லாமல் அவரை வெளியே பார்க்க முடியாது என்கிறார்கள் அவருடன் படித்த தோழிகள்.


Click it and Unblock the Notifications











