twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யுவன் உதவி இருக்காவிட்டால் என் குடும்பமே நடுத்தெருதான்..தனுஷ் உருக்கம்

    |

    சென்னை: யுவன் சங்கர் ராஜா இசையில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது.

    இதன் டீசர் மிரட்டலாக வெளியானது. இதில் யுவனின் வழக்கமான பிஜிஎம் இருந்ததை காண முடிந்தது.

    11 ஆண்டுகளுக்குப்பின் இந்த காம்போ இணைகிறது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு ரவுடி பேபி பாடல் மூலம் தனுஷ் யுவன் இணைந்தனர்.

    25 வருஷம் ஃபிட்டா இருக்காரு.. ஒர்க் அவுட் மட்டுமே காரணம்.. சினம் படத்துல வேற அருண் விஜய்ய பாப்பிங்க!25 வருஷம் ஃபிட்டா இருக்காரு.. ஒர்க் அவுட் மட்டுமே காரணம்.. சினம் படத்துல வேற அருண் விஜய்ய பாப்பிங்க!

    துள்ளுவதோ இளமை பழைய நினைவு

    துள்ளுவதோ இளமை பழைய நினைவு

    நடிகர் தனுஷ் தனது அண்ணன் இயக்கத்தில் முதன் முதலில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானார். அது ஒரு பள்ளி மாணவர்களின் விடலைக்காதல் கொஞ்சம் ஓவர் ஆபாசம் கொண்ட கதை. இந்தப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இந்தப்படம் அதிகம் விமர்சிக்கப்பட்டாலும் பாடல்களுக்காக படம் ஓடியது. படத்தில் நடித்த கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் அதிகமாக நெகட்டிவாக விமர்சிக்கப்பட்டார்.

    மறக்க முடியாத 7 ஜி ரெயின்போ காலனி

    மறக்க முடியாத 7 ஜி ரெயின்போ காலனி

    அதன் பின்னர் அடுத்த ஆண்டே காதல் கொண்டேன் படத்தை எடுத்தார் செல்வராகவன் இதிலும் தனுஷ் தான் ஹீரோ. இந்த படத்தின் பாடல்களும் ஹிட் அடித்தது. அதன் பின்னர் செல்வராகவன் தனுஷ் இல்லாமல் எடுத்த 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் மீண்டும் யுவன் இணைந்தார். முத்துகுமாரின் பாடல் வரிகளுக்கு யுவனின் இசை பெரும் பலமாக அமைந்தது. பாடல்கள் இன்றுவரை பேசப்படுகிறது. ஆனால் படத்தில் தான் தனுஷ் இல்லை.

    2011 க்குப் பிறகு பிரிந்த காம்போ- எங்கோ போய்விட்ட தனுஷ்

    2011 க்குப் பிறகு பிரிந்த காம்போ- எங்கோ போய்விட்ட தனுஷ்

    தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போ எப்போதும் வென்றுள்ளது. அதன் பின் புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன என 2006, 2008, 2011 ஆண்டுகளில் இந்த காம்போ வெற்றிப்படங்களை கொடுத்தது. அதன் பின் இந்தக்கூட்டணி பிரிந்தது. தனுஷ் மிகப்பெரிய அளவில் அடுத்தடுத்த வெற்றிகளை குவித்தார். 4 தேசிய விருதுகளை பெற்றார். தனுஷ் அனிருத் கூட்டணி பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் 2018 ஆம் மாரி-2 படத்தில் தனுஷ் யுவன் இணைந்தனர். தனுஷ் பாடிய ரவுடி பேபி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

    நன்றிக்கடன் பட்டதாக சொன்ன தனுஷ்

    நன்றிக்கடன் பட்டதாக சொன்ன தனுஷ்

    2018 ஆம் மாரி-2 படத்தின் விழாவில் பேசிய தனுஷ் யுவன் ஷங்கர் ராஜாவை வெகுவாக புகழ்ந்தார். தன் அண்ணனுடன் தான் யுவன் வருவார். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். யுவன் இப்பவும் எனக்கு ஹீரோ மாதிரி தெரிகிறார். அறிமுகமே இல்லாத புதுமுகமான நான் நடித்த துள்ளுவதோ இளமை படத்திற்கு அற்புதமான இசை அமைத்ததால் படம் நன்றாக ஓடியது. அன்று நாங்கள் இருந்த நிலையில் படம் மட்டும் ஓடியிருக்காவிட்டால் நடுத்தெருவுக்கு வந்திருப்போம். யுவன் எங்களை காப்பாற்றினார் என தனுஷ் கண் கலங்க சொன்னார்.

    தனுஷ், யுவன், செல்வராகவன் காம்போவில் மீண்டும் நானே வருவேன்

    தனுஷ், யுவன், செல்வராகவன் காம்போவில் மீண்டும் நானே வருவேன்

    இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல இசையமைப்பாளர்கள் வந்து போகின்றனர். ஆனால் யுவன் ஒரு பக்கம் அப்படியே நிற்கிறார், இது யார் மனதையாவது புண் படுத்தினால் மன்னிக்கவும் என கூறினார் தனுஷ். யுவன் ஷங்கர் ராஜாவை மிக உயரத்தில் வைத்து பார்க்கும் தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போ மீண்டும் இணைந்து நானே வருவேன் படம் வெளிவரவுள்ள தருணத்தில் யுவன் ஷங்கர் ராஜா குறித்து தனுஷ் பேசியது இணையத்தைல் வைரலாகிவருகிறது.

    English summary
    Nane Varuven directed by Selvaraghavan with music by Yuvan Shankar Raja is released at the end of this month. Its teaser was released as a threat. It could be seen that Yuen's usual BGM was present. After 11 years this combo joins. Dhanush joined Yuvan earlier in 2018 with the song Rowdy Baby.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X