என் ரசிகர்கள் என்னை கொல்லப் போகிறார்கள்... மிரளும் பிரபாஸ்! ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: தனது ரசிகர்கள் தன்னை கொல்லப்போகிறார்கள் என நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகரான பிரபாஸ் தனது பாகுபலி படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். பாகுபலி படத்தின் மூலம் தமிழ் மற்றும் இந்தி மொழி ரசிர்களுக்கும் பரிட்சயமானார் பிரபாஸ்.
இதனால் நடிகர் பிரபாஸின் அடுத்தப்படம் எப்போது வரும் காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில்தான் சாஹோ படத்தில் கமிட்டானார் பிரபாஸ்.

பெரிய தொகை சம்பளம்
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ரதா கபூர் நடித்துள்ளார். சாஹோ படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்காக பிரபாஸ் பெரியத் தொகையை சம்பளமாக பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்
இந்த படம் வரும் 30 தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

நினைத்திருந்தேன்
இந்நிலையில் சாஹோ படம் குறித்து நடிகர் பிரபாஸ் பேசியுள்ளார். அதாவது, பாகுபலி படத்திற்காக 4 வருடங்கள் எடுத்துக்கொண்டேன். இனி எந்தப் படத்திற்கும் அதுபோன்று அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நினைத்திருந்தேன்.

அதிக நாட்கள் தேவைப்பட்டது
ஆனால் சாஹோ படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு எனக்கு வேறு வழி தெரியவில்லை. படத்தில் சண்டை காட்சிகள் அதிம் இருந்ததால் அதனை காட்சியாக்க அதிக நாட்கள் தேவைப்பட்டது.

கொல்லப்போகிறார்கள்
ஆக்ஷன் காட்சிகளுக்காக மட்டும் ஒரு வருடம் உழைத்திருக்கிறோம். பாகுபாலி படத்திற்கு பிறகு என்னுடைய அடுத்த படமான சாஹோ ரிலீஸ் ஆக 2 வருடம் எடுத்துக்கொண்டதால் ரசிகர்கள் என்னை கொல்லப்போகிறார்கள் என்றும் கூறினார் நடிகர் பிரபாஸ்.


Click it and Unblock the Notifications











