எங்க அப்பா சாவு கேம்மில்ல.. கதறியழுத அர்ச்சனா.. களேபரமான பிக்பாஸ் வீடு.. கலக்கத்தில் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பது முதல் புரமோவில் தெரியவந்தது.
புதிய மனிதா என்ற இந்த டாஸ்க்கில் அர்ச்சனா தலைமையில் கேபி, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், ரம்யா ஆகிய 6 பேர் ரோபோக்களாக உள்ளனர். பாலாஜி தலைமையில் ஆரி, ரியோ, அனிதா, நிஷா, ஆஜித் ஆகிய 6 பேர் மனிதர்களாக உள்ளனர்

வெறுப்பேற்றிய அனிதா பாலா
மனிதர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து ரோபோக்களுக்கு மகிழ்ச்சி, கோபம், துக்கம் என ஏதாவது இரண்டு உணர்ச்சிகளை கொண்டு வர வேண்டும். இதில் அனிதாவும் பாலாஜியும் அர்ச்சனா மற்றும் அவரது டீமை வெறுப்பேற்றினர்.

விளாசிய அர்ச்சனா
இதனால் முதல் புரமோவிலேயே கண்ணீர் விட்டார் அர்ச்சனா. இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் அன்பு கேங்குக்குள் பிளவு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் பேசும் அர்ச்சனா, ஒரு நபரரை முடிவு செய்து பஸர் டூ பஸர்க்குள்ள முடிக்கணும். நீங்க 6 பேரையும் அடிச்சுக்கிட்டே இருந்தா எப்படி என விளாசுகிறார்.

பச்ச பொய் ரியோ
அப்போது பேசும் ரியோ, அதுதான் தப்பென்று கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்கிறார். ஆனால் அதனை ஏற்காத அர்ச்சனா, அதெல்லாம் பச்ச பொய் ரியோ, நீ நம்ப மாட்ட விட்ரு என கும்பிடு போட்டு தேங்க் யூ தேங்க் யூ என்று சொல்லியப்படியே செல்கிறார் அர்ச்சனா.

பாலாஜி சமாதானம்
பின்னாடியே செல்லும் பாலாவும் ரியோவும் அக்கா கோவப்படாதீங்க என்றபடியே பின்னால் சென்று கெஞ்சுகின்றனர். ஆனால் அர்ச்சனா, உண்மை ரியோ, நீ பாதி இடத்துல இல்லவே இல்லை என்கிறார். அப்போது அர்ச்சனாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார் பாலாஜி.

அப்பாவின் மரணம்
ஆனால் அர்ச்சனா அது விளையாட்டல்ல.. இங்கிருந்து போ, இங்கிருந்து போ என பயங்கரமாக கத்துகிறார். அவரை ஆசுவாசப்படுத்த முயற்சிக்கும் பாலாஜி, என்மேல கோவப்படாதீங்க என்கிறார். அதற்கு என் அப்பாவின் மரணம் விளையாட்டல்ல என கதறியழுகிறார் அர்ச்சனா.

ஸ்தம்பித்த வீடு
அப்போது பேசும் நிஷா, நான் பேசினேன் என்கிறார். அதற்கு யார் பேசினால் என்ன நிஷா அவரிடம் ஆவேசமாக கத்துகிறார் அர்ச்சனா. அர்ச்சனா கத்துவதையும் கதறுவதையும் பார்த்து மொத்த வீடும் ஸ்தம்பித்து போயுள்ளது. இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











