ரசிகர்களுக்காகவே அப்பா டுவிட்டரில் இணைந்தார்... : சவுந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

சென்னை: ரசிகர்களோடு தன்னை இணைத்துக் கொள்ள விரும்பியே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்ததாக அவரது மகளும், கோச்சடையான் பட இயக்குநருமான சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

நாளை வெளியாக இருந்த கோச்சடையான் படம் சிலப்பல காரணங்களுக்காக வரும் 23ம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையே சமூக வலைதளமான டுவிட்டரில் சூப்பர்ஸ்டார் இணைந்துள்ளார்.

டுவிட்டரில் ரஜினியைப் பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது சாதனையாகக் கருதப் படுகிறது. இந்நிலையில், தன் தந்தையின் டுவிட்டர் பிரவேசம் பற்றி சவுந்தர்யா கூறியதாவது :-

ரஜினியின் விருப்பம்...

ரஜினியின் விருப்பம்...

ரசிகர்களுக்கும், தனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் என்று அப்பா (ரஜினிகாந்த்) சொல்லிக்கொண்டே இருப்பார்.

மகிழ்ச்சியான விஷயம்...

மகிழ்ச்சியான விஷயம்...

சமூக தளங்களில் இணையும்படி பல நாட்களாகவே நிறைய பேர் அப்பாவிடம் வலியுறுத்தி வந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது. எல்லோருக்கும் இது மகிழ்ச்சி.

திட்டமிட்டதல்ல....

திட்டமிட்டதல்ல....

தற்போது ‘கோச்சடையான்' படம் வெளியாகும் நேரத்தில் டுவிட்டரில் இணைந்திருப்பது இயல்பாக நடந்த ஒன்றுதான்.

புதுமையான அம்சங்கள்...

புதுமையான அம்சங்கள்...

என்னுடைய முதல் திரைப்படமான இதில் புதுமையான விஷயங்களை நிறைய கொடுத்துள்ளோம்.

எதிர்பார்ப்பான மனநிலை...

எதிர்பார்ப்பான மனநிலை...

அப்பாவின் ரசிகை, ஓர் இயக்குநர், ரஜினிகாந்தின் மகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகிழ்ச்சியான, எதிர்பார்ப்புடனான ஒரு மனநிலையோடு உள்ளேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X