twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம் ஆர் ராதாவின் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்..அவர் லெஜெண்ட் - ராதாரவி #MR Radha

    |

    Recommended Video

    MR ராதா BIOPIC படம் யாரையும் எடுக்க விடமாட்டேன் | ACTOR RADHA RAVI | V-CONNECT | FILMIBEAT TAMIL

    சென்னை: எங்க குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்... அப்பா அற்புதமான மனிதர் அவரைப்போல இன்றைக்கு யாராலும் நடிக்க முடியாது. அண்ணன் தம்பிகள் அக்கா தங்கைகள் என பல குடும்பங்களாக இருந்தாலும் யாரையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் ஒன்றாக இருப்போம் என்று கூறியுள்ளார் நடிகர் ராதாரவி. பெரியாரின் போர்வாளாக இருந்தவர் அப்பா எம்ஆர் ராதா, அவரது 101வது பிறந்தநாளில் திடீரென மரணமடைந்தார். திராவிடர் கொள்கைகளை பரப்பியவர் என்று ராதாரவி கூறியுள்ளார். எம்ஆர் ராதாவின் 40வது நினைவுதினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அவரது நினைவுகளை நமது ஒன்இந்தியா பிலிமி பீட் இணைய தள ரசிகர்களுக்காக பகிர்ந்து கொண்டார்.

    அப்பாவைத் தாண்டி நான் வளரவில்லை. அந்த அளவிற்கு எம்ஆர் ராதா அவர்களின் புகழ் இன்னமும் ஓங்கி வளர்கிறது. கலைஞர் பற்றி சொல்வதற்கு பேசுவதற்கு காரணம் அப்பா எம்ஆர் ராதாதான். கலைஞர் என்று பட்டம் கொடுத்தவரே அவர்தான்.

    My Father MR Radha is a great actor and hard worker

    நீயே உனக்கென்றும் நிகரானவன். இது அப்பாவிற்காக எழுதப்பட்ட வரிகள். நடிப்பு மகான் சிவாஜி அப்பாவிற்காக பாடினார். பலே பாண்டியா படத்தில் நடித்த போது சிவாஜியை அமெரிக்காவிற்கு கூப்பிட்டிருக்கின்றனர். அந்த படத்தில் நடித்த போது ரொம்ப பிஸியாக இருந்திருக்கின்றனர். அப்போது நடித்தவர்கள் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து கொடுத்தனர்.

    படத்தை சீக்கிரம் முடிக்கவேண்டும் என்று ஸ்டுடியோவிலேயே தங்கி நடித்து கொடுத்தனர். சிவாஜியை விமான நிலையம் போய் வழியனுப்பி வைத்தார். அழைத்து வந்தார். 14 நாட்களில் அந்த படத்தை சூட்டிங் முடித்தனர்.

    அப்பாவின் கரகர குரலுக்குப் பின்னால் நிறைய அன்பு இருக்கிறது. மேடையில் பேசும் போது புரியுற மாதிரி பேசணும். முகமூடி இல்லாமல் பேசுவார் அப்பா. யாரையும் பாதிக்கக் கூடாது என்றும் பேசவேண்டும்.

    தூத்துக்குடியில் ஒருமுறை திராவிடர் கழகம் சார்பில் போடப்பட்ட போர்வாள் நாடகத்தில் முதல் சீனில் பேசுறார். தொண்டை கட்டிக்கொண்டது. அந்த குரலோடு பேசும் போது குரல் எழவில்லை. அப்புறம் திக கொடியை பிடித்துக்கொண்டு பெரியார்... என்று பேசும் போது கை தட்டல் அதிர்ந்தது.

    விவேக், மணிவண்ணன், மலேசியா வாசுதேவன் என பலருக்கும் அப்பாதான் இன்ஸ்பிரேசன். பல விசயங்களை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
    ஆனால் அப்பா பெயரில் படம் எடுக்க விடமாட்டேன். காரணம் நடிகவேள் எம்ஆர் ராதா பயோபிக் எடுக்கும் போது நன்றாக எடுக்க வேண்டும். சரியாக எடுக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் எடுக்கணும்.

    அவர் நடித்த பல படங்கள் சிறப்பானவை. படித்தால் மட்டும் போதுமா படம் ரீமேக் பண்ணலாமா என்று நினைத்தேன். ஆனால் சரியான நேரம் வரவில்லை. ராஜசுலோசனா மாதிரி நடிகை கிடைக்கவில்லை. அப்பா உடைய கதாபாத்திரம் எடுத்து நடிக்க ஆசை. பாகப்பிரிவினை படம் மீண்டும் எடுக்க ஆசை. டிஎஸ் பாலையா போல யாராலும் செய்ய முடியாது. சரோஜாதேவி அம்மா போல யாராலும் நடிக்க முடியாது. இருந்தாலும் எனக்கு ஆசைதான்.

    எம் ஆர் ராதா அப்பா, உல்லாச பயணம், கைராசி போன்ற படங்கள் எல்லாம் நன்றாக நடித்திருப்பார். காதல், அழுகை எல்லாம் நடிக்க கொஞ்சம் சிரமப்படுவார். எங்கப்பா நடிப்பு அற்புதம். குள்ளமாக இருந்தாலும் அற்புதமாக உடை அணிவார். ரத்தக்கண்ணீர் படத்தை வேறு எதனோடும் கம்பேர் பண்ணவே கூடாது.

    அப்பா உடனான நினைவுகள் அற்புதமானவை. நான் நல்ல டிரைவர். இதற்கு காரணம் அப்பாதான். எனக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்தது அப்பாதான். எங்க குடும்பம் பெரிய பல்கலைக்கழகம். அதை யாராலும் மறுக்க முடியாது.

    சிறு வயதில் இருந்தே நாங்க அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். நான் எப்போதுமே ராதிகாவை விட்டுக்கொடுக்க மாட்டோம். அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நாங்க போய் நிற்போம். தேனாம்பேட்டைதான் தலைமையகம். எங்கப்பா கோடீஸ்வரர். ஆறு மனைவியுடன் வாழ்ந்தாலும் அத்தனை குழந்தைகளும் வளர்ந்தது தேனாம்பேட்டைதான். எங்க அம்மா தனலட்சுமி அம்மதான் வளர்த்தார். அனைவருக்கும் முகவரி கொடுத்தவர் எம்ஆர் ராதா. அனைவருக்கும் எல்லாமே கொடுத்தவர். அனைவரிடமும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறினார் ராதாரவி.

    English summary
    My Father MR Radha is a great actor reached to top position with his hard work says Radha Ravi. MR. Radha was born in 1907. He died in September 17, 1979, MR Radha was an active member of the Dravidian movement, and was known for his rabid atheist views.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X