வேகமாக பரவிய தவறான தகவல்.. முற்றுப்புள்ளி வைத்தார் ராதிகா சரத்குமார் !

சென்னை : நடிகை ராதிகா சரத்குமார் தன்னை பற்றி ரசிகர் ஒருவர்,ட்விட்டரில் பதிவிட்ட தவறான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார் தற்போது பல படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

ரசிகர்கள் ட்விட்டரில் கேட்கும் கேள்விகளுக்கு எப்போதும் தனது பதில்களை தொடர்ந்து கொடுத்து ரசிகர்களுடன் நட்பு பாராட்டி வருபவர் நடிகை ராதிகா சரத்குமார்

அனைவரையும் கவர்ந்து

அனைவரையும் கவர்ந்து

கொஞ்சும் மொழியால் திரைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் கவர்ந்து வருபவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரஜினி, கமல், விஜயகாந்த், மோகன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தியில் பரிச்சயம்

ஹிந்தியில் பரிச்சயம்

அவ்வாறு இவர் நடித்த பல தமிழ் படங்கள் வெற்றியடைந்து மிகப்பெரிய வசூலை வாரி குவித்த நிலையில், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து அனைத்து மொழியினருக்கும் நன்கு பரிச்சயம் ஆனார்.

ப்ரண்ட்லி அம்மாவாக

ப்ரண்ட்லி அம்மாவாக

பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்த ராதிகா சரத்குமார் தற்போது வளர்ந்து வரும் பல இளம் நடிகர்களுக்கு ப்ரண்ட்லி அம்மாவாகவும் நடித்து இந்த தலைமுறை ரசிகர்களையும் தவறாமல் கவர்ந்து வருகிறார்.

தொலைக்காட்சி தொடர்களிலும்

தொலைக்காட்சி தொடர்களிலும்

விஜய்யுடன் தெறி, விஜய் சேதுபதியுடன் நானும் ரவுடிதான் போன்ற பல வெற்றிப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் இன்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இரண்டாம் பாகமாக

இரண்டாம் பாகமாக

90களில் மிகப் பிரபலமான தொலைக்காட்சி தொடரான சித்தி குடும்பத்தில் இல்லத்தரசிகள் உட்பட அனைவரையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த தொடர் பலரின் வேண்டுகோளுக்கிணங்க தற்பொழுது இரண்டாம் பாகமாக உருவாகி புதுப்பொலிவுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சில்க் ஸ்மிதாவை

சில்க் ஸ்மிதாவை

இந்நிலையில் தற்போதுள்ள லாக்டவுன் சூழலில் பல திரைப்படங்களின் பழைய வீடியோக்களும், பழைய திரைப்படங்களின் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் நிலையில் ராதிகா சரத்குமார் மற்றும் சுஹாசினி மணிரத்னம் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் ராதிகா நடிகை சில்க் ஸ்மிதாவைப் போன்று நடித்துக் காட்டி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.

பாஞ்சாலி

பாஞ்சாலி

இவ்வாறு பல திறமைகளை கொண்டுள்ள ராதிகா சரத்குமார் முதன்முதலில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் பாஞ்சாலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

என்னுடைய முதல்படம்

என்னுடைய முதல்படம்

இந்நிலையில் இவரது ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் முதன்முதலில் மலையாள படத்தில் தான் நடித்தார் ஆனால் அந்த படம் திரையரங்கில் வெளியாகாததால், கிழக்கே போகும் ரயில் திரைப்படம் இவருக்கு அறிமுக திரைப்படமாக அமைந்தது என குறிப்பிட்டிருந்தார். அந்த ரசிகரின் பதிவிற்கு ராதிகா சரத்குமார் " கிழக்கே போகும் ரயில் தான் என்னுடைய முதல் படம், வேறு எந்த மலையாளப் படமும் இல்லை. என அந்த ரசிகரின் தவறான தகவல் பதிவிற்கு நேரடியாக பதில் அளித்து அந்த ரசிகரின் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X