45 வருட நண்பர், இணையிலா சினிமா தொழில் விற்பன்னர் சசி காலமானார்: கமல் இரங்கல்
சென்னை: தனது நண்பர் ஐ.வி. சசியின் மரண செய்தி அறிந்து கமல் ஹாஸன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் ஐ.வி. சசி இன்று சென்னையில் காலமானார். அவருக்கு நடிகை சீமா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கமல், ரஜினி ஆகியோரை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர் சசி.
கமல், ரஜினி ஆகியோரை வைத்து அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தை இயக்கியவர் சசி. சசியின் மரண செய்தி குறித்து அறிந்த கமல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நண்பர்
நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்
கமல்
எனக்கு எப்படி பாலச்சந்தரோ. மளையாளத்தில் மம்முட்டிக்கு திரு ஐ.வி.சசி அவர்கள்..
கமல்ஹாசன்
அவளுடே ராவுகள்
அவரின் பிரபலமான படம் அவளுடே ராவுகள். அவரின் மனைவி சீமா தான் ஹீரோயின்(திருமணத்திற்கு முன்பு).
கந்துவட்டி
அந்த சசி குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிட்டிங்க.. இந்த சிசு குடும்பத்துக்கு..?
கந்து வட்டி கொடுமையை எதிர்த்து அறிக்கை கால தாமதம் ஏனோ..?


Click it and Unblock the Notifications











