என் குரு.. என் உணர்வு.. இப்படியா போயிட்டீங்க?.. பாக்யராஜ் மறைவால் கதறிய நடிகர் ஆதவன்

சென்னை: இந்தியத் திரையுலகில் 'திரைக்கதை மன்னன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜ் மாரடைப்பு காரணமாக காலமானது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ஆதவன் பகிர்ந்துள்ள உருக்கமான பதிவு இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாக்யராஜுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்த ஆதவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் திடீர் மறைவு என் மனதை உலுக்கிவிட்டது. என் குரு... என் உணர்வு... என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருந்த அன்பான நண்பர்" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

My Guru My Emotion Actor Aadhavan s Heartbreaking Tribute to Bhagyaraj Leaves Fans Emotional

கடைசிப் படமாகும் என்று நினைக்கவே இல்லை: மேலும், "நாங்கள் அனைவரும் இணைந்து பணியாற்றிய அந்த திரைப்படம்தான் உங்கள் கடைசிப் படமாகிவிடும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை. இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருந்த நிலையில், இப்படிப்பட்ட செய்தியை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது" என்று அவர் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த வரிகள், பாக்யராஜின் மறைவு படக்குழுவினருக்கு எந்த அளவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

கதற வைத்த பிரிவு: தனது பதிவின் இறுதியில், "எப்போதும் மற்றவர்களை சிரிக்க வைக்கவும், சந்தோஷப்படுத்தவும் மட்டுமே தெரிந்த உங்களுக்கு... இன்று எங்களை இப்படி கதறி அழ வைக்கவும் தெரியும் என்று நினைக்கவில்லை. எங்கள் அனைவரையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டீர்கள். உங்கள் நினைவுகளும், நீங்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடங்களும் என்றும் எங்களோடு வாழும். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று ஆதவன் குறிப்பிட்டுள்ளார்.

ஆதவனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாக்யராஜுடன் இணைந்து பணியாற்றியவர்களின் மனதில் அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்ல, வழிகாட்டியாகவும், நண்பராகவும் வாழ்ந்ததை இந்த பதிவு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X