இதயம் கனக்கிறது, ஆனாலும் சிரிப்பேன்: ஸ்ரீதேவி மகள் உருக்கம்

By Siva

மும்பை: அம்மா ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று மகள் ஜான்வி கபூர் சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார்.

நாத்தனார் மகனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவர் உயிர் இழந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அம்மா நினைவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி

தான் அம்மா மடியில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஜான்வி கபூர் கூறியிருப்பதாவது, என் இதயம் எப்பொழுதும் கனக்கும். ஆனால் அதில் நீங்கள் இருப்பதால் நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டிருப்பேன் என்கிறார்.

சோனம் கபூர்

சோனம் கபூர்

ஜான்வியின் ட்வீட் மற்றும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். அக்கா சோனம் கபூரம் லவ் யூ ஸ்வீட்டி என்று தெரிவித்துள்ளார்.

தடக்

தடக்

ஜான்வி நடிகையாக அறிமுகமான தடக் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருந்த ஸ்ரீதேவி அதை பார்க்காமலே சென்றுவிட்டார். ஸ்ரீதேவி இறந்தபோது ஜான்வி தடக் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். படப்பிடிப்பு இருந்ததால் அவர் அம்மாவுடன் துபாய்க்கு செல்லவில்லை.

சென்னை

சென்னை

சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் கடந்த 14ம் தேதி அவருக்கு திதி கொடுக்கப்பட்டது. அதில் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். ஸ்ரீதேவி இறந்த பிறகு நடிகர் அர்ஜுன் கபூர் ஜான்வி மற்றம் அவரின் தங்கை குஷியை தனது சொந்த தங்கை போன்று பார்த்துக் கொள்கிறார். போனி கபூரின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்த மகன் தான் அர்ஜுன் கபூர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X