Don't Miss!
- News
சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற பெண்.. கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..உடல் நசுங்கி உயிரிழப்பு
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என் ஹீரோ.. என் நண்பன்.. என் விக்ரம்.. கமல் தோளில் சாய்ந்து குஷ்பு நெகிழ்ச்சி.. ரீசன்ட் க்ளிக்ஸ்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தோளில் சாய்ந்தபடி நடிகை குஷ்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றியை வெகு விமர்சையாக விருந்து வைத்து கொண்டாடி உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
படத்தில் பணியாற்றியவர்களுக்கு பரிசு, விருந்து என தனக்கு கிடைத்த லாபத்தை கொடுத்தவர்கள் கைம்மாறு செய்து வருகிறார்.
அஜித்
வழியை
பின்பற்றும்
சூர்யா..
எந்த
விஷயத்துல
தெரியுமா..
பாக்கலாம்
வாங்க!

பாகுபலி வசூலை முந்திய விக்ரம்
தமிழ்நாட்டில் 150 கோடி வசூல் உடன் பாகுபலி 2ம் பாகத்தின் தமிழ்நாடு வசூலை கமல்ஹாசனின் விக்ரம் படம் முந்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில், அதிகாரப்பூர்வமாக ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படத்தின் விநியோகஸ்தர் உதயநிதி ஸ்டாலினே அறிவித்து இருந்தார்.

பலே விருந்து
கைதி, மாஸ்டர், விக்ரம் என தனது படங்களில் பிரியாணிக்கு தனி சீன் வைக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கே நேற்று பலமான விருந்தை வைத்து அழகு பார்த்தார் கமல்ஹாசன். கமல், லோகேஷ் கனகராஜ், அனிருத் எல்லாம் ஒன்றாக அமர்ந்து வாழை இலையில் கறி விருந்து உண்ணும் புகைப்படங்களும், 40 வகையான உணவுகள் வழங்கப்பட்ட லிஸ்ட்டும் டிரெண்டாகி வருகிறது.

கமலுடன் குஷ்பு
விக்ரம் படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கமல் தோள் மீது சாய்ந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

மை ஹீரோ
மேலும், அந்த புகைப்படங்களுடன் 'மை ஹீரோ.. மை பிரெண்ட்.. மை விக்ரம்' என விக்ரம் படத்தை குறிப்பிட்டு நடிகை குஷ்பு பதிவிட்டு இருப்பதை பார்த்த கமல் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை லைக் செய்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர். சுடிதாரில் செம அழகாக குஷ்புவும், கோட் போன்ற சட்டையை அணிந்து செம கூலாக கமலும் அந்த புகைப்படத்தில் உள்ளனர்.

சிங்காரவேலன் ஞாபகம் வருது
நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே சிங்காரவேலன் படம் தான் ஞாபகத்துக்கு வருது என கமெண்ட் போட்டு கண் வைத்து வருகின்றனர். மைக்கேல் மதன காமராஜன், சிங்காரவேலன் என சில படங்களிலேயே இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இணைவார்களா
அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் பல ஆண்டுகள் கழித்து நடிகை குஷ்பு இணைந்து நடித்த நிலையில், மீண்டும் கமலுடன் இணைந்து ஏதாவது புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.