"என்னை நடிக்கக் கூடாதுன்னு கணவர் சொல்லிட்டார்"... மேடையில் வருத்தப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்!

தன் மீது கொண்டுள்ள அக்கறையினால், ஹவுஸ் ஓனர் படத்தில் தன்னை நடிக்கக் கூடாது என தனது கணவர் தடை போட்டதாக இயக்குனர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை: ஹவுஸ் ஓனர் படத்தில் தன்னை நடிக்கக் கூடாது என கணவர் கூறிவிட்டதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ள படம் ஹவுஸ் ஓனர். இப்படத்தில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, பசங்க கிஷோர், லவ்லின், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹவுஸ் ஓனர் படத்தின் பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு திரையிடல் சென்னையில் நேற்று நடந்தது. படம் முடிந்தபிறகு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தனர்.

அப்போது பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் படத்தில் தன்னை நடிக்கக் கூடாது என கணவர் தடைபோட்டுவிட்டதாகக் கூறினார். இதுகுறித்து அவர் பேசியதாவது,

காதலின் கொண்டாட்டம்

காதலின் கொண்டாட்டம்

"இது முழுக்க முழுக்க காதலை கொண்டாடும் படம். இரண்டு வெவ்வேறு காலக்கட்டத்தில் பயணிக்கும் ஒரு தம்பதியின் கதை இது. அதனை 2015 சென்னை மழை வெள்ளத்தின் பின்னணியில் படமாக்கியுள்ளோம்.

ஸ்ரீரஞ்சனிக்கு பாராட்டு

ஸ்ரீரஞ்சனிக்கு பாராட்டு

ஆடுகளம் கிஷோர், பசங்க கிஷோர், ஸ்ரீரஞ்சனி, லவ்லின் என படத்தில் நடித்த அனைவருமே தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக ஸ்ரீரஞ்சனி சிறப்பாக நடித்திருக்கிறார். அவருடைய ரோலில் நான் தான் நடிக்க இருந்தேன். ஆனால் நான் நடித்திருந்தால் கூட இத்தனை அழகாக இருந்திருக்காது.

நடிக்க தடை

நடிக்க தடை

இந்த படத்தில் இயக்குனர் வேலையை மட்டும் பார்க்கும்படி எனது கணவர் கூறிவிட்டார். நடிக்க முடியாதது வருத்தமாக தான் இருந்தது. ஆனால் அவர் தான் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் என்னால் மீற முடியவில்லை. அதிகபடியான காட்சிகள் தண்ணீரில் நடப்பதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டு விடக்கூடாது எனும் அக்கறையில் தான் அவர் நடிக்க தடைபோட்டார்.

டைட்டானிக் பட்ஜெட்டில்...

டைட்டானிக் பட்ஜெட்டில்...

இந்த படத்தை டைட்டானிக் மாதிரி பெரிய பட்ஜெட்டிலும் எடுத்திருக்க முடியும். ஆனால் எங்களுடைய பட பிசினஸ் என்ன என்பது எனக்கு தெளிவாக தெரியும். அதனால் தான் கிராப்பிக்ஸ் எதுவும் செய்யாமல், செட் போட்டு படத்தை எடுத்தோம்", என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X